சூர்யா இல்லைன்னா சிம்பு!‘சூரரைப் போற்று’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சுதா கொங்குராவும் சூர்யாவும் மீண்டும் இணையவிருப்பதாக கூறப்பட்டு அந்த ப்ராஜெக்ட்டுக்கு ‘புற நானூறு’ என்றும் பெயர் வைக்கப்பட்டது.இந்தப் படத்தின் கதை தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற பேச்சு எழுந்தது. 
இதனால் கதை, திரைக்கதையைப் பற்றிய சில சலசலப்புகள் சுதாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே எழுந்ததால் சூர்யா அந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டார் என கிசுகிசு இறக்கை கட்டிப் பறக்கிறது.

இந்நிலையில் சிம்புவின் 50வது படத்தை சுதா கொங்கரா இயக்கப் போவதாகவும், இது ஒரு ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்றும், இப்படத்தை மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் லேட்டஸ்ட் ஆக கோலிவுட்டில் சலசலக்கிறார்கள்.செல்போன் தயாரானால் விற்பனைக்காக கடைக்கு வந்துதானே தீரவேண்டும்?!

காம்ஸ் பாப்பா