Lift



‘‘ரொம்ப தேங்க்ஸ் ப்பா. என்ன யார்னே உனக்குத் தெரியாது. இருந்தாலும் லிஃப்ட் கேட்டவுடனே பைக்க நிறுத்தி ஏத்திகிட்ட...’’
‘‘இட்ஸ் ஓகே...’’‘‘ஆனாலும் நீ ரொம்ப ஸ்மார்ட் ப்பா. இவ்ளோ பெரிய உதவிய பண்ணிட்டு இட்ஸ் ஓகேன்னு சிம்ப்ளா சொல்ற...’’
‘‘.....’’‘‘ப்பா... உனக்கு சொந்த ஊரு எது..?’’‘‘இதே ஊருதான்...’’

‘‘கல்யாணமாயிடுச்சா..?’’
‘‘ம்...’’
‘‘புள்ள குட்டிங்க எத்தன..?’’
‘‘ரெண்டு...’’
‘‘ரெண்டா... கஷ்டம்தான்...’’
‘‘.....’’
‘‘உனக்கு என்ன ராசி?’’ 
‘‘மீனம்...’’
‘‘மீனமா..? ஏழரையாச்சே... ரொம்ப கஷ்டமாச்சே... எப்படிப்பா 
சமாளிக்கிற..?’’
‘‘கஷ்டம்தான்...’’ 
‘‘வண்டி எத்தன குடுக்குது..?’’

‘‘நாப்பது...’’
‘‘என்ன... நாப்பதுதானா..? எழுபது, எண்பது கொடுக்கும்னு கேள்விப்பட்டேனே..?’’
‘‘அதெல்லாம் 100CC பைக்குங்க... இது ...CC. அவ்வளவுதான் 
கொடுக்கும்...’’
‘‘அதான் மைலேஜ் கம்மியா கொடுக்குதே... பின்ன ஏன் இத வாங்குன..?’’

‘‘இந்த  இஞ்சின் ரொம்ப சுமூத்ங்க... அதுவுமில்லாம எவ்வளவு வேகமா போனாலும் பிரேக் அடிச்சா நச்சுன்னு அடிச்ச எடத்துலயே நிக்கும்...’’
‘‘வண்டி அடிக்கடி குலுங்குதே... பயமோ..?’’ ‘‘பயமா..? சே... சே... நான் எப்படி வண்டி ஓட்டுவேன்னு எங்க பக்கத்து வீட்டு அங்கிள்கிட்ட கேட்டுப்பாருங்க... அவரு சொல்லுவாரு...’’
‘‘அப்படியா..?’’‘‘ஆமா... அவரு வண்டி பின்னாடி ஏறி ஒக்காரும் போது 73 கிலோ இருந்தாரு. திரும்பி வீட்டுக்கு வரும்போது 77 கிலோ ஆயிட்டாரு...’’
‘‘அப்படியா... ஆச்சர்யமா இருக்கே..?’’

‘‘ஆமா... அவர் கால்ல போட்ட மாவு கட்டு மட்டும் நாலுகிலோ வெயிட்டு...’’
‘‘நீ... என்னப்பா சொல்ற..?’’
‘‘நம்பிக்கை இல்லன்னா எங்க எதிர்த்த வீட்டு மாமிய கேட்டுப் பாருங்க...’’
‘‘என்ன... அவங்களுக்கும் உன் வண்டில போய்ட்டு திரும்பி வரும் போது வெயிட் ஏறிடுச்சா..?’’

‘‘இல்ல... குறஞ்சிடுச்சி...’’
‘‘கொறஞ்சிடுச்சா..?’’

‘‘ஆமா... அவங்களோட ஒரு கையையே எடுக்க வேண்டியதாப் போச்சி...’’
‘‘......’’
‘‘சார்...’’
‘‘......’’
‘‘சார்...’’
‘‘....’’
‘‘குதிச்சி ஓடிட்டான் போல... கொய்யால... லிஃப்ட் கேட்டோமா... ஏறி ஒக்காந்தோமா... நம்ம எடம் வந்தவுடனே எறங்குனோமான்னு இல்லாம தொண தொணன்னு வண்டிய ஓட்டுறப்ப டிஸ்டர்ப் பண்ணிகிட்டு... மவனே இனி யார்ட்டயாவது லிஃப்ட் கேப்ப..?!’’

பொம்மையா முருகன்