ஆண்களுக்கு வரன் பார்க்கறீங்களா? இதைப் படிங்க..!
திருமண மார்க்கெட்டில் மாப்பிள்ளைகள் கண்டிஷன் போடும் காலமெல்லாம் போயே போச்சு. இப்போது திருமண மார்க்கெட்டில் பெண்கள்தான் ஆயிரத்தெட்டு கண்டிஷன்ஸ் போடுகிறார்கள்!
 சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் நண்பர் கூறிய விவரங்கள் அனைத்தும் பகீர் ரகம். ஜாதக பொருத்தம், அந்தஸ்து, மாப்பிள்ளையின் வேலை, சம்பளம் எல்லாம் பொருந்தி வந்தும் பெண்களின் கண்டிஷன்ஸால் பிள்ளை வீட்டார் தலைதெறிக்க ஓடுகிறார்களாம்.
 நண்பர் சொன்னவற்றில் சில சாம்பிள்ஸ்...
* ‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாணத் தேதி குறிச்சிருந்தோம். போன்ல பேசிக்கிட்டாங்க. இப்ப பையன் வேண்டாம்னு சொல்றா...’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.
வேறொண்ணுமில்லை. ‘வீட்டிலே ‘குக்’ இருக்கா’ என அந்தப் பெண் கேட்டிருக்கிறார். அதற்கு பையன், ‘குக் இருக்கு. ஆனா, அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’ என சொல்லியுள்ளார். அதெப்படி என்னை சமைக்கச் சொல்லலாம்? ‘எங்கம்மா சமைப்பாங்க’ என சொல்லணும் இல்லையா என்பது பெண்ணின் கேள்வி!  * இன்னொரு பெண். வயது 32. ‘‘பையன் யூஸ்லெஸ். ‘சினிமா போனேன்’னு சொன்னா ‘யார் கூட போனே’னு கேட்கறான். இடியட். ஐ வாண்ட் மை ஸ்பேஸ். எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் வேணும். பாருங்க!’’
* ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது: ‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்ல. அதை இப்பவே சொல்லிடறோம். அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க அல்லது வெளியூர்ல குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்க வேலைபார்க்கற மாதிரி பையன் பாருங்க!’’
* இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பானு எதிர்பார்க்க வேண்டாம். அவளுக்கு காபி கூட கலக்கத் தெரியாது. இதைச் சொல்லிடுங்க முதல்ல!’’வேறொரு பெற்றோர், ‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா!’’
* வரன் வந்திருப்பதாக பெண் வீட்டுக்கு போன் செய்தால், ‘‘பொண்ணு ஃப்ரைடேதான் வருவா. சண்டேதான் பேசணும். சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா. அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்ட்டா போயிடும். நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்!’’ என்கிறார்களாம்.
* ‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு ஓகே சொல்வேன்! ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன். அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு. என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும்!’’ என்கிறார்கள் பெண்கள். ஸோ, பெண் தேடும் இளைஞர்களே... கால மாற்றத்தைப் புரிந்துகொண்டு திருமண வாழ்க்கைக்கு செல்லுங்கள்!
விமலாதித்தன் மணி
|