நன்றி சார்... ரொம்ப நன்றி!
ஹலோ..! ஹலோ... மன்னார் & மன்னார் மசாலா கம்பெனி ஓனருங்களா..? ஆமாம்ப்பா... ஓனர் சார் உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்...
 தீபாவளி முடிஞ்சு ஒரு மாசம் ஆகப் போகுதேப்பா... பரவால இருந்தாலும் வாழ்த்து சொன்னதுக்கு நன்றிப்பா... அப்புறம் நானும் உங்களுக்கு ஒரு நன்றி தெரிவிச்சுக்கிறேன்... எனக்கெதுக்குப்பா நன்றி..? குலோப் ஜாமுன் மாவு பாக்கெட் ஒண்ணு வாங்குனா ஒண்ணு ஃப்ரீன்னு கொடுத்திருக்கீங்களே... இதுக்கெல்லாம் எதுக்குப்பா நன்றி...
ஆனா... நான் சொன்ன நன்றி அதுக்கில்ல... பின்ன... மன்னார் & மன்னார் பாதாம் மிக்ஸ் ஒண்ணு வாங்குனா இன்னொண்ணு ஃப்ரீன்னு ஆஃபர் கொடுத்திருக்கேனே... அதுக்கா..? இல்ல...
பேரிச்சம்பழம் பாக்கெட் ஒண்ணு வாங்குனா இன்னொண்ணு ஃப்ரீன்னு ஆஃபர் கொடுத்திருக்கேனே... அதுக்கா..? இல்ல... சத்து மாவு ஒண்ணு வாங்குனா இன்னொண்ணு ஃப்ரீன்னு கொடுத்திருக்கேனே... அதுக்கா..? இல்ல... இல்ல...
பின்ன எதுக்குப்பா எனக்கு நன்றி சொல்ற..? ரவா பாக்கெட் ஒண்ணு வாங்குனா இன்னொண்ணு ஃப்ரீன்னு கொடுக்காததுக்கு... இல்லைனா என் பொண்டாட்டி தினமும் நைட்டு உப்புமா செய்திருப்பா!l
பொம்மையா முருகன்
|