இந்திய சீரியல்களின் மாஸ் நடிகைகள்!



ஆயிரம் சிட்னி ஸ்வீனிகள் இணைய வெளியில் சிறகடிக்கலாம்,  லட்சம் ராஷ்மிகா மந்தனாக்கள் வைரல் ரகளை செய்யலாம். ஆனால், எவ்வித ஆர்ப்பாட்டமும் அலப்பறையும் இல்லாமல் ஒவ்வொரு இந்திய வீட்டின் கிச்சன் வரை சென்று தாய்க்குலங்களை தினம் தினம் தடுமாற வைக்கும் ஒரே சக்தி சீரியல் நடிகைகள் வசம்தான் உண்டு. 
சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று தனக்கென தனி அந்தஸ்து, அதிக சம்பளம் என மாஸ் காட்டுகிறார்கள். அப்படி கெத்து காட்டும் இந்திய சீரியல் நடிகைகளில் சிலரது ‘த நேஷன் வான்ட்ஸ் டூ நோ’ டேட்டா இதோ...

ஸ்மிருதி இரானி

இவர் வரலாறு தெரிந்தால் நாள் ஒன்றுக்கு இவர் பெறும் பல லட்சங்கள் குறைவு எனத் தோன்றும். துளசி இரானி என்றால் இந்தியத் தாய்மார்கள் நிமிர்ந்து உட்கார்வார்கள். இரானி என்றால் இன்னொரு புறம் இந்திய அரசியல்வாதிகளும் சற்றே தடுமாறி உட்காருவார்கள். அந்தளவுக்கு மேடம் வரலாறு படைத்தவர். 2000ம் ஆண்டு வெளியான ‘கியூன் கீ சாஸ் பி கபி பஹு தி’ சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் ஸ்மிருதிக்கு. அதில்தான் துளசி கேரக்டரில் தூள் கிளப்பினார். 

தொடர்ந்து 2013ம் ஆண்டு வரை சீரியலில் நடிகையாக இருந்தார். அதே சமயம் 2003ம் ஆண்டில் இருந்தே அரசியலிலும் ஆர்வம் காட்ட பிஜேபி அவரை வரவேற்க... அதிகாரபூர்வ அரசியல்
வாதியானார். 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் உத்திரப்பிரதேசம், அமேதியில் ராகுல்  காந்தியை எதிர்த்து போட்டியிட்டு ஜெயித்தார். 
தொடர்ந்து எம்பியாக பல பொறுப்புகள், ஏராளமான பதவிகள் என அரசியலில் இருந்தவர், 20 வருடங்களுக்குப் பிறகு அதே ‘கியூன் கீ சாஸ் பி கபி பஹு தி’ சீரியலின் 2ம் பாகத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்க... இப்பொழுது இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார். ஒருபக்கம் அரசியல், இன்னொரு பக்கம் நடிப்பு என இரண்டிலும் வெற்றிகரமாக பயணிக்கிறார். 

ஜன்னத் சுபைர் 

சம்பளம்: ‘ஃபியர் ஃபேக்டர்’ ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு ரூ.18 லட்சம் பெற்றார் இருபத்தைந்து வயது ஜன்னத், 2008ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்தவர். 82% மார்க் எடுத்து +2வில் தேர்ச்சி பெற்ற ஜன்னத் செம படிப்ஸ் மங்கை. பல சீரியல்களில் கதாநாயகியாக நடித்தவரின் சம்பளம் எகிறியது, ‘ஃபியர் ஃபேக்டர்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியபோதுதான். அந்த விளைச்சலை இப்பொழுது சீரியலில் அறுவடை செய்கிறார்.

ரூபாலி கங்குலி

48 வயதான ரூபாலி 1985ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கியவர். 2000ம் ஆண்டில் ‘சுகன்யா’ என்கிற டிவி தொடர் மூலம் சீரியல் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர் ‘சராபி Vs சராபி\” தொடர் மூலம் பிரபலமான நடிகையாக மாறினார். 
இப்போதும் இவர் டிவி சீரியலில் நடிக்க நாள் ஒன்றுக்கு பல லட்சங்களைப் பெறுகிறார். ம்... ம்... இவரும் அரசியலில் ஆக்டிவ்தான். 

ஜெனிஃபர் விங்கெட் 

1995ம் ஆண்டு ஆமிர்கான், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான ‘அகேலே ஹம் அகேலே தும்’ படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தவர் 2000ம் ஆண்டு வெளியான ‘ஷகலக பூம் பூம்’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். ‘தில் மில் கையே’, ‘சரஸ்வதி சந்திரா’, ‘பேபன்னா’ போன்ற சீரியல்கள் இவரை இந்திய பிரபலம் ஆக மாற்றியது. 

தேஜஸ்வி பிரகாஷ்

வயது 32. சவுதி அரேபியாவில் பிறந்த பெண். இரண்டு நாட்டு குடியுரிமையும் வைத்திருக்கும் தேஜஸ்வி, 2014 முதல் சினிமா, சீரியல், மியூசிக் வீடியோக்கள், வெப் தொடர்கள் என பிரபலம். முதல் சீரியல் ‘2613’. ‘நாகின்’ சீரியலிலும் அதிரடி காட்டினார். இப்போது சீரியலோ, படமோ எதுவானாலும் நாள் ஒன்றுக்கு இவ்வளவு லட்சம் என்றே கறாராக ஊதியம் பெறுகிறார். 

ஷ்ரத்தா ஆர்யா

2004ம் ஆண்டு ‘இந்தியா’ஸ் பெஸ்ட் சினிஸ்டார் கி கோஜ்’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தவர். ‘தும்ஹரி பாக்கி’ சீரியல் பிரபலமாக்கியது. ஒரு ஆச்சர்யமான தகவல், இவரை சினிமாவிற்கு அழைத்து வந்தவர் நம்மூர் இயக்குநர் தமிழ்வண்ணன் என்பது. 

இவர் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கள்வனின் காதலி’ படத்தில் இரண்டாவது நாயகி இவர்தான். இந்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். ‘கும்கும் பாக்யா’ சீரியல் மூலம் இந்தியா முழுக்க தெரிந்த முகமானார்.

சாக்‌ஷி தன்வார்

இந்திய சின்னத்திரையின் கம்பீர நடிகை எனப் பெயர் பெற்றவர். 100 இந்திய பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்த நடிகை. இந்த சீரியல் என்றில்லை இவர் நடித்த அத்தனை சீரியல்களும் தமிழிலும் நாம் பார்த்திருப்போம். ‘லாலியா’ சீரியல் மூலம் சின்னத்திரை அறிமுகம். ‘தங்கல்’ படத்தில் ஆமிர்கான் ஜோடி. மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். ‘மிஷன் ஓவர் மார்ஸ்’, ‘மாய்: த மதர்ஸ்’ ரேஜ்’, ‘த ராயல்ஸ்’ உள்ளிட்ட பல பிரபல வெப் தொடர்களிலும் கதை நாயகி, முக்கிய கேரக்டர்கள் என டிரெண்டிங்கில் இருக்கிறார். 

படித்து முடித்துவிட்டு நடிக்க வரும் முன் சேல்ஸ் டிரெயினியாக ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்திருக்கிறார். ‘ஹாட்டஸ்ட் டெலி ஸ்டார்’, ‘தேசத்தின் அதீத காதல் பெற்ற டெலி ஸ்டார்’ எனப் பல பட்டங்கள், விருதுகளுக்குச் சொந்தக்காரர். 2018ம் ஆண்டு ஒருகுழந்தையை தத்தெடுத்துக்கொண்ட சாக்‌ஷி யாரையும் திருமணம் செய்துகொள்ளாதசிங்கிள் மதர். 

திவ்யங்கா திரிபாதி

‘இந்தியா’ஸ் பெஸ்ட் சினிஸ்டார்ஸ் கி கோஜ்’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். ‘யஹ் ஹை மொஹபதீன்’ வட இந்தியா தாண்டி தென்னிந்திய சேனல்களிலும் பிரபலமாகியது. மற்ற மொழிகளிலும் கூட இந்தத் தொடர் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தொடர்ந்து ‘துல்ஹான்’,  ‘பானு மெயின் தெரி’ உள்ளிட்ட பல சீரியல்கள் மூலம் ட்ரெண்டிங் நாயகியாக சுற்றி வருகிறார்.

ஹீனா கான்

ஜம்மு காஷ்மீரில் இருந்து ஜம்மென இறங்கிய நடிகை. 2008ம் ஆண்டு ‘இந்தியன் டால்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையானார். இவரும் ‘நாகின்’ சீரியல் பாகங்களின் நாயகிதான். 
‘யஹ் ரிஷ்தா கியா கெஹ்லாதா ஹை’ சீரியல் மூலம் பிரபலமானார். 20க்கும் மேலான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஹீனா பங்கேற்றிருக்கிறார். படங்கள், வெப் தொடர்களும் கூட இவர் நடிப்பில் சில அவ்வப்போது வருவதுண்டு. 

ஆயிஷா சிங்

29 வயது மும்பை பொண்ணு. டாப் 50 ஆசிய ஸ்டார்கள் பட்டியலில் இடம் பிடித்தவர். 2015ம் ஆண்டு சின்னத்திரையில் ‘டாலி அர்மான் கி’ சீரியல் மூலம் அறிமுகம். ‘கும் ஹை கிசிகே பியார் மெய்ன்’ சீரியல் மூலம் பிரபலம். வெறும் நான்கைந்து சீரியல்கள்தான். ஆனால், இந்தி சேனல்களைப் பார்க்கும் அத்தனை பேருக்கும் ஆயிஷாவைத் தெரியும். ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுப்பது ஆயிஷாவின் ஸ்பெஷல் டெம்ப்ளேட்.

ஷாலினி நியூட்டன்