முடியல!



Untitled Document



தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவர், எம்.ஜி.ஆருக்கு புகழ் தேடித் தந்தவர். ரஜினிக்கு வெற்றி அளித்தவர். ஆனால், அவரது வாரிசு தண்டாயுதபாணியின் இன்றைய நிலைமை? கண் கலங்குகிறது.
- எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.


‘பாரதிராஜா படம் நல்ல அனுபவமா இருக்கும்னு நடிக்கப் போனவனுக்கு அதுவே பெரிய அனுபவமா ஆயிடுச்சு’ என்ற விரக்தியான வார்த்தைகளில்கூட பார்த்திபன் ‘டச்’ தெரிந்தது.
- எம்.ஜி.பரத், திண்டுக்கல்.

 
பால், பேருந்து கட்டண உயர்வுகளின் தாக்கம் மக்கள் பேட்டியில் தெரிந்தது. இப்பவே முடியல... இன்னும் மிச்சமிருக்கும் ஆண்டுகள் எப்படித் தாக்குப் பிடிப்பதோ? வேதனை! வேதனை!   
-  வே.முருகேசன், சென்னை-88..


‘காதல் காக்க’ சிறுகதை, வாழ்வில் சூழலைத் தாண்டி யதார்த்தம் விளையாடும் என்பதை அழகாக எடுத்துரைத்திருந்தது.   
-  பாரதி, சிதம்பரம். 
 
‘மனைவி சாட்சியாக காதலிக்கு தாலி கட்டிய சத்யராஜ்’ கட்டுரையின் கடைசி வரிகளான ‘காதலுக்கு கண் மட்டுமில்லை... இன்னும் நிறைய புலன்களும் இல்லை போலிருக்கிறது’ என்ற வரிகள் ரொம்பவும் சிந்திக்க வைக்கின்றன. 
 
-  வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.
 

தென் மாவட்ட ரயில்கள் சென்னை மாநகரத்தின் மையப்பகுதியான எழும்பூரைத் தொடாமல் தாம்பரத்திலேயே நிறுத்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  
 
-   ஆர்.ராஜதுரை, சீர்காழி..
 
தற்கொலைகளைத் தடுக்க என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென டாக்டர் லட்சுமி விஜயகுமார் கூறிய ஆலோசனைகள் வரவேற்கத்தக்கது.
 
- ஏ.ஜி.கல்யாணசுந்தரம், சென்னை-126.
 

தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடத்தினை ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் சாத்தியமா? இதை அலசி ஆராய்ந்து நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.   
-  இரா.வளையாபதி, கரூர்.
 

மீடியாக்கள் கணித்ததையெல்லாம் தவிடுபொடியாக்கி, வலி பொறுத்து, சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்று மாடல் பெண்களுக்கு மட்டுமல்ல... மற்ற எல்லோருக்கும்கூட நல்ல தாய்மையை உணர்த்தி விட்டார் ஐஸ்!  
 
-  உமா மோகன்தாஸ், திண்டுக்கல்.
 
    ‘ஃபிளாஷ் பிளாக்’ பகுதியில் நெகிழ வைத்த சம்பவங்களை ரசித்துச் சுவைத்துக் கொண்டிருந்த வேளையில் திடீர் என நிறைவடைகிறது என அறிவித்தது ஏமாற்றமே! 
 
-  எம்.மிக்கேல்ராஜ், விருதுநகர்..
 
கணினி என்ற உயிரற்ற அறிவியல் சாதனம் ஆறறிவு படைத்த மனிதனின் நல்லுணர்வுகளைத் தின்று, சமுதாயத்தை நோயாளியாக்கிய அவலத்தை பழநிபாரதியின் எழுத்தில் படித்தபோது இதயம் வலிக்கிறது.   
-  எம்.சம்பத், கரூர்.