தத்துவம் மச்சி தத்துவம்





‘‘தலைவர் எவ்வளவு வேலை இருந்தாலும், தினமும் ரெண்டு மணி நேரத்தை படிக்கறதுக்காக ஒதுக்கிடுவாரு...’’
‘‘அப்ப குற்றப் பத்திரிகைகளை தவறாமல் படிச்சிடுவார்னு சொல்லுங்க..!’’
- சிக்ஸ்முகம், கள்ளியம்புதூர்.

என்னதான் ஒரு நடிகரோட பேர் ‘ஆறுமுகம்’னு இருந்தாலும், அவரோட ஒரு முகத்துக்குத்தான் ‘மேக்கப்’ போடுவாங்க!
- ‘பேக்கப்’ சொன்ன பிறகும்
‘மேக்கப்’பை கலைக்காதோர் சங்கம்
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘டாக்டர் பட்டம் தந்ததுக்கு தலைவர் என்ன சந்தேகம் கேக்கறார்..?’’
‘‘அவர் சின்ன வயசில் கத்தியும் கையுமா அலைஞ்சது இவங்களுக்கு
எப்படித் தெரியும்னு கேக்கறார்..!’’
- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.

‘‘நீதிபதி கூட தலைவர் எதுக்கு சண்டை போட றாரு..?’’
‘‘கோர்ட் தீர்ப்பை
தன் காதுல மட்டும்தான்
சொல்லணும்னு தலைவர்
கேட்டாராம்...’’
- அம்பை தேவா, சென்னை-118.

என்னதான் நீங்க பெரிய கட்சித்தலைவரா இருந்தாலும், கேஸ் குடுக்க வக்கீல்கிட்ட போகும்போது நீங்க அவருக்கு ‘கட்சிக்காரர்’தான்; கட்சித் தலைவர் கிடையாது!
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

என்னதான் தெய்வம் நின்று கொல்லும்னாலும், அதன் மேல யாராலும் எஃப்.ஐ.ஆர். போட முடியாது!
- அடிக்கடி தெய்வத்தை சாட்சிக்கு இழுப்போர் சங்கம்.
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘மன்னர் ஏன் கடுப்பாக
உள்ளார்..?’’
‘‘போருக்குச் செல்வதாக அவர் சொன்னதும், ‘மன்னா... மண்ணு தின்ன ஆசையா’ என்று அமைச்சர் கேட்டு விட்டாராம்..!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.