ஐ... ஐ... சென்னை!





ஷங்கரின் ‘ஐ’ ஷூட் ச்சீயான் நடிக்க பெரம்பூர், காசிமேடு, திருவல்லிக்கேணி, ராயபுரம், தேனாம்பேட்டைன்னு சென்னையைச் சுத்தியே அதிகாலை ஆரம்பிச்சு மிட்நைட் வரை போய்க்கிட்டிருக்கு. இங்கே முடிச்சு சீனா போறாங்களாம். ஃப்ளை ஹை..!

‘கன்ஜாயின்ட் ட்வின்ஸ்’ லைனை வச்சுக்கிட்டு ஆளாளுக்கு கயிறு திரிச்சுக்கிட்டிருக்க, கருமமே கண்ணாயிருக்கு ‘மாற்றான்’ டீம். இந்த நேரம் நார்வேல சூர்யாவோட காஜல் ஆடற பாடலை ஷூட் பண்ணிக்கிட்டிருக்கார் கே.வி.ஆனந்த். யானை படுத்தாலும்...

தீவிர சிகிச்சையில தோல் நோய் குணமாகி பளிச்சுன்னு வந்துடுச்சாம் சமந்தா. அதனால பாதியில நிற்கிற கௌதம் வாசுதேவ் மேனனோட ‘நீதானே என் பொன்வசந்தம்’ வேலைகள் மளமளன்னு தொடங்கிடுச்சு... சமத்து தான்..!

ஜார்ஜியாவில செல்வராகவனோட ‘இரண்டாம் உலகம்’ தொடர்ந்து நடக்க, அங்கேர்ந்து ‘அலெக்ஸ் பாண்டியன்’ பாடல் காட்சிகளுக்காக கார்த்தியோட பாட்டுப் பாட சென்னை வந்துடுச்சு அனுஷ்கா. பறக்கும் பாவை..!



இரண்டாம் தலைமுறை இளையராஜாவோட கைகோர்த்த எம்.எஸ்.வி., இப்ப ரீமேக்காகிற ‘தில்லு முல்லு’ படத்துல தன் மூன்றாம் தலைமுறை மியூசிக் டைரக்டர் யுவனோட கைகோர்த்து இசையமைக்கிறார். மன்னருக்கு இணை யார் மெல்லிசையில..?

ரேஸ்ல ‘தல’க்கு இருக்கிற ஆர்வத்தைப் போலவே ஷாலினி அஜித்துக்கு பேட்மின்டன்ல இருக்கிற விருப்பம் தெரிஞ்சதுதான். அதுல மும்முரமாகிட்ட ஷாலினி, சமீபத்துல மாநில அளவுக்கான போட்டிக்குத் தகுதியடைஞ்சிருக்காங்க.
அசத்துங்க ‘தல’வி..!

‘ரூபா மஞ்சரி’க்கு செகண்ட் ரவுண்டு கைகொடுத்திருக்கு. மலையாளத்துல பொண்ணு நடிச்ச ‘மல்லுசிங்’ நூறு நாளைத் தொட, இங்கே ‘நான்’ சக்சஸாக, பொண்ணு வீட்டு வாசல்ல யோகலட்சுமி. ரூபாவுக்கு இனி ரூபாய்களை எண்ண வேண்டிய காலம்..!

கருணாஸ் ஹீரோவாகிற ‘ரகளபுர’த்துல அவரோட மகன் கென்னும் முக்கியக் கேரக்டர்ல நடிக்கிறான். நடிக்கிறது மட்டுமில்லாம, முமைத் கான் சிஸ்டர் சபீனா கானோட ஒரு குத்தாட்டமும் போட்டிருக்கானாம் கென். ஹிஸ் ஃபாதர்ஸ் சன்..!

‘அட்டகத்தி’ ஹீரோ தினேஷ், ஜனநாதனோட ‘ஈ’யிலேயே அறிமுகம் ஆனவர். பிறகு, ‘ஆடுகள’த்துல தனுஷுக்குப் போட்டியா தப்ஸியைக் காதலிச்சு, ‘மௌனகுரு’வில தப்பான பையனா நடிச்சும், ‘அ.க’தான் அவருக்கு அடையாளம் தந்திருக்கு.
- கோலிவுட் கோயிந்து

சைலன்ஸ்


இந்திக்குப் போயிடலாம்னு நினைச்ச ஹீரோவோட ஆட்டக் களம் அங்கே வீக்காகிட, இனி தமிழையே குறி வைக்கிறதுன்னு முடிவெடுத்துட்டாராம். இங்கேயும் கூட மூணு படங்கள் கவிழ்ந்திட, இனி பெரிய பட்ஜெட்டெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா படம் பண்ற ஐடியாவில் இருக்காராம் அவர். ஸ்மால் மேக்கர்ஸ் மே கான்டாக்ட் தி ஹீரோ...

ஹாட்டாகி கூலாகி ஹாட்டாகி கூலாகி போய்க்கிட்டிருந்த ‘மாஸ்க்’ படம் கடைசியா அவுட்டோர் போன சாங் சீக்குவன்ஸ்ல ஒன்ஸ் அகெய்ன் ஹை வோல்டேஜைத் தொட்டுடுச்சாம். அந்த கோபத்துல டப்பிங்குக்குக் கூட வர மனமில்லாம இருந்த ஹீரோவை கன்வின்ஸ் பண்ணிக் கூட்டி வர முடிஞ்சது புரட்யூசரோட பிராட் மைண்டாலதானாம். எந்த மாஸ்க்குக்குள்ள யாரோ..?