தத்துவம் மச்சி தத்துவம் 1




முட்டையில ஆம்லெட் போடலாம்; முட்டைக்கோஸ்ல ஆம்லெட் போட முடியுமா?
கோஸ்ல பொரியல் செய்யலாம்; குளுக்கோஸ்ல பொரியல் செய்ய முடியுமா?
- செல்.பச்சமுத்து, பெரம்பலூர்.

‘‘ஆனாலும் தலைவருக்கு ரொம்பத்தான் பேராசைங்கறியே... ஏன்?’’
‘‘வெறும் நாலு லட்ச ரூபாய் ஊழல் பண்ணிட்டு,
விசாரிக்க வந்த உள்ளூர் போலீஸ்கிட்ட ‘இந்த கேஸை சி.பி.ஐ விசாரிக்காதா’ன்னு கேட்கறாரே...’’
- பிரியதர்ஷன், சேலம்.

ஓட்டல்ல இட்லி ஆர்டர் பண்ணலாம்; பூரி ஆர்டர் பண்ணலாம்; சப்பாத்தி ஆர்டர் பண்ணலாம்... ஆனா மணி ஆர்டர் பண்ண முடியாது!
- ஆர்டரை வைத்து தத்துவத் தேர்வெழுதி பார்டரில் பாஸ் செய்வோர் சங்கம்
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘கட்சி ஆபீஸ்ல
என்னய்யா கூட்டம்..?’’
‘‘மகளிரணித் தலைவிக்கு ‘செல்லப் பெயர்’ சூட்டறாங்களாம்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

கோயிலுக்குப் போய், ‘‘இறைவா... எனக்கு படிப்பைக் கொடு, புத்தியைக் கொடு, கொஞ்சம் பொறுமையைக் கொடு’’ன்னு வேண்டலாம். ஆனா, ‘‘கொஞ்சம் கடன் கொடு’’ன்னு வேண்ட முடியுமா?
- ஜி.தாரணி, அரசரடி.

‘‘டாக்டர்! எனக்கு தினமும் தூக்கத்துல பேய் கனவா வருது...’’
‘‘கனவுதானே... அதுக்கு ஏன் பயப்படுறீங்க?’’
‘‘அதை ரெண்டு பேய் தொகுத்து வேற வழங்குதே டாக்டர்!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘என் பையன் வேலைக்குப் போற பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றான்...’’
‘‘ஏன்..?’’
‘‘பின்னே... ரெண்டு பேருமே வேலைக்குப் போகலைன்னா, அப்புறம் எப்படி குடும்பம் நடத்த முடியும்?’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.