தத்துவம் மச்சி தத்துவம்





முள்வேலியில் முள் இருக்கும்; கம்பிவேலியில் கம்பி இருக்கும்; நெய்வேலியில் நெய் இருக்குமா?
- நெய்வேலி கரன்ட்டை எதிர்பார்த்து பவர்கட்டில் தவிப்போர் சங்கம்
- சக்தி இளங்கோ,
தஞ்சாவூர்.

‘’மன்னர் ஏன் கடுப்பா இருக்கார்..?’’
‘‘டூர் போகலாம்னு சொல்லி போருக்குக் கூட்டிட்டு வந்துட்டாங்களாம்..!’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘நம்ம கட்சிக்காரங்க எல்லோரும் ரொம்ப வறுமையில இருக்காங்கன்னு நினைக்கிறேன் தலைவரே...’’
‘‘எப்படிய்யா சொல்றே..?’’
‘‘உங்க பிறந்த நாள் பேனர்ல ‘வாழ்த்த வசதியில்லை’ன்னு போட்டு இருக்காங்க பாருங்க!’’
- கே.ஆனந்தன்,
பி.பள்ளிப்பட்டி
.

‘‘உங்க கிட்னியில கண் இருக்கு... எச்சரிக்கையா இருங்க!’’
‘‘வழக்கமா கல்தானே இருக்கும்... நீங்க புதுசா சொல்றீங்களே நர்ஸ்?’’
‘‘இது டாக்டரோட கண்...’’
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

வருவாய்த்துறை, நிதித்துறை, உள்துறை இதுக்கெல்லாம் அமைச்சருங்க இருப்பாங்க; படித்துறைக்கு எங்கேயாவது அமைச்சர் இருப்பாங்களா?
- பட்ஜெட்டில் விழும் துண்டை எடுத்து தலைவருக்குப் போர்த்துவோர் சங்கம்
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டு நம்ம தலைவர் மானத்தை வாங்கிட்டாரா... ஏன்?’’
‘‘இதுவரை தான் இழந்த டெபாசிட் தொகை எவ்வளவுன்னு கேட்டுத் தொலைச்சுட்டார்..!’’
- நா.கி.பிரசாத், கோவை.

பால் பாக்கெட்டுக்குள்ளே பால் இருக்கும்; முறுக்கு பாக்கெட்டுக்குள்ளே முறுக்கு இருக்கும். அது மாதிரி சட்டை பாக்கெட்டுக்குள்ளே சட்டை இருக்குமா?
- எம்ப்ட்டி பாக்கெட்டை எட்டிப் பார்த்து ஃபீல் பண்ணுவோர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.