தத்துவம் மச்சி தத்துவம்





பிச்சைக்காரர்கள் தங்களுக்குள் சண்டை போடுறதையெல்லாம் யாரும் ‘தர்ம யுத்தம்’னு சொல்லவே முடியாது.
- கோயில் வாசலில் தர்ம சிந்தனையோடு தத்துவம் எழுதுவோர் சங்கம்
- அ.பேச்சியப்பன்,
ராஜபாளையம்.


காதல் என்பது ‘சிக்ஸ்பேக்’ போல,
ஒழுங்கா மெயின்டெயின் பண்ணலைன்னா போயிடும்;
நட்பு என்பது தொப்பை மாதிரி,
ஒரு தடவை வந்துடுச்சுன்னா போகவே போகாது!
- ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.

எவனோ கட்டிக்கப் போற பொண்ணுக்கு ஐஸ்க்ரீம், சாக்லெட் எல்லாம் வாங்கிக் குடுத்து அவ ஹெல்த்தை தேத்தி விட்டு, சுடிதார், மேக்கப் அயிட்டங்கள், பூ, எல்லாம் வாங்கிக் குடுத்து அட்டு ஃபிகரை அழகு ஃபிகராக்கி, எவனுக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலைதான் காதல்!
- எல்லாம் வாங்கிக் குடுத்து போண்டியானோர் சங்கம்
- கே.கே.ரமேஷ், திருச்சி.

‘‘ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தது
தப்பாப் போச்சு...’’
‘‘ஏன்..?’’
‘‘நான் வெளியே போயிட்டு திரும்ப வீட்டுக்குள்ளே போகும்போதெல்லாம் என் மனைவி ஏக்கப் பெருமூச்சு விடறா..!’’
- பாளை பசும்பொன், நெல்லை.

‘‘நம்ம தலைவர் இதுவரைக்கும் பத்து கடைகளைத்தான் திறந்து வச்சிருக்கார்... ஆனா ‘நூறாவது கடைத் திறப்புவிழா’ன்னு ஏன் போஸ்டர் ஒட்டச் சொல்றார்?’’
‘‘அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி ராத்திரியில திறந்த கடைகளையும் சேர்த்துச் சொல்றாரா இருக்கும்!’’
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

‘‘பழிவாங்கறதுல அந்தக் கட்சியை மிஞ்ச ஆள் கிடையாதுன்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘மக்கள் மனதில் ‘இடம்’ பிடிப்பேன்னு பேசினதுக்கே, நம்ம தலைவரை நில அபகரிப்பு வழக்குல உள்ளே போட்டுட்டாங்க..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘நடு ராத்திரியில் புகார் கொடுக்க வந்திருக்கீங்களே... என்ன விஷயம்?’’
‘‘நான் என் தூக்கத்தைத் தொலைச்சுட்டேன் சார்..!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.