தத்துவம் மச்சி தத்துவம் 1





‘‘தலைவர் சைனீஸ் பொண்ணை லவ் பண்றாருன்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘இந்தியாவில் சீனாவின் முதலீட்டை ஆதரிக்கிறேன்ங்கறாரு...’’
- சி.பி.செந்தில்குமார், சென்னிமலை.

‘‘ஆனாலும் தலைவருக்கு ஞாபக சக்தி இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கக் கூடாது...’’
‘‘ஏன்... என்ன சொன்னார்?’’
‘‘அவர் முதல்வர் ஆகற மாதிரி கனவு வந்து 1817 நாள் ஆகுதுன்னு சொல்றாரே!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘தலைவரே... 2014 தேர்தல் நெருங்குது. என்னை கவனிச்சுடுங்க... மறந்துடாதீங்க!’’
‘‘ஓ... சீட்டுதானே!’’
‘‘சீட்டு எவன் கேட்டான்... எங்கிட்டே கைமாத்தா வாங்கின நூறு ரூபாயை ஞாபகப்படுத்துறேன்!’’
- வே.முருகேசன், சென்னை-88.

‘‘தலைவருக்கு வார இதழுக்கும், அரசிதழுக்கும் வித்தியாசமே தெரியல...’’
‘‘எப்படிச் சொல்றே?’’
‘‘தொடர்ந்து பல சிறுகதைகள் அனுப்பியும் ஒன்றுகூட அரசிதழ்ல பிரசுரமாகலையேங்கிறாரு!’’
- பாலா சரவணன், சென்னை.

‘‘மன்னர் ஏன் கடுப்பா இருக்கார்..?’’
‘‘அவர் புறமுதுகிட்டு ஓடி வர்ற வழியில டோல்கேட் போட்டு கட்டணம் வசூல் பண்றாங்களாம்...’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

என்னதான் கிராமத்துல நாட்டாமை தலைமையில கிரிக்கெட் போட்டி நடத்துனாலும், ‘பிட்ச்’ல ‘ஸ்டெம்ப்’தான் வச்சிருப்பாங்க. ‘செம்பு’ வச்சிருக்க மாட்டாங்க...
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

பொறுமை கடலினும் பெரிது தான்... அதற்காக அதில் படகோ, கப்பலோ விட முடியாது!
- பொறுமையாகக் காத்துக் கிடப்போர் சங்கம்
- கு.அருணாசலம், தென்காசி.