ஜோக்ஸ்



‘‘இந்த கிளினிக்ல மொத்தம் ரெண்டே ரெண்டு வார்டுதானா... என்னென்ன?’’
‘‘ஒண்ணு, டாக்டர் கைவிட்ட வார்டு... ரெண்டாவது, நர்ஸ் கைவிட்ட வார்டு!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘என் வீட்டுக்காரர் சாப்பிட்டு முடிச்சதும் காரணமே இல்லாமல் கும்பிடறார் டாக்டர்...’’
‘‘வேற ஒண்ணும் இல்லம்மா! சாப்பாட்டுல ‘அம்மா உப்பு’
கூடியிருக்கும்...’’
- அதிரை புகாரி,
அதிராம் பட்டினம்.

‘‘தலைவரோட சுய சரிதையில பிற்பகுதி முழுக்க பய சரிதை மாதிரி தெரியுதே... ஏன்?’’
‘‘அவர் மேல் வழக்குகள் நடந்தப்ப எழுதினதாச்சே!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘எதுக்கு தலைவரே பொதுக்கூட்டத்தை
அவசரமா இன்னைக்கே வைக்கச் சொல்றீங்க..?’’
‘‘நாளைக்கு நான்
எந்தக் கட்சியில
இருப்பேன்னு
தெரியலையே...’’
- ஏ.மூர்த்தி,
புல்லரம்பாக்கம்.

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் கட்டிடக் கலையில் பெரிய நிபுணரா இருந்தாலும், அவரால செங்கல்லை வச்சு வீடு கட்டற மாதிரி விக்‘கல்’லை
வச்சு வீடு கட்ட முடியாது!
- கடனுக்கு வீடு
வாங்கி லோன் கட்ட
முடியாதோர் சங்கம்
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

என்னதான் சீரியஸா இருக்கிற
ஒரு பேஷன்ட்டை ‘அபாய
கட்டத்தைத் தாண்டிட்டார்’னு டாக்டர் சொன்னாலும், அவர் எத்தனை மீட்டர் தாண்டினார்னு எல்லாம் சொல்ல முடியாது.
- அவசர சிகிச்சைப் பிரிவில் அமர்ந்துகொண்டு சாவகாசமாய் தத்துவம் சொல்வோர் சங்கம்
- பி.கோபி, கிருஷ்ணகிரி.

‘‘தலைவருக்கு மண்டை குழம்பிப் போச்சோ என்னவோ தெரியலை...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘ ‘கட்சியைக் கலைக்கணும்... நல்ல லேடி டாக்டரா பாருய்யா’ங்கறாரு!’’
- அனார்கலி, தஞ்சாவூர்.