facebook வலைப்பேச்சு




பகலிலும் விளக்கொளியோடு ஊர்ந்தால் அது பணக்கார வாகனம்.
# ஆடி, பிஎம் டபிள்யூ, பென்ஸ்
- மன்னை முத்துக்குமார்

உலர்ந்த திராட்சை (அ) கிஸ்மிஸ் என நாம் சாப்பிடுவதில் பாதி
வேப்பம்பழமே.
# கலப்படம்.
- கிருஷ்ணா கிட்டு

வாழ்க்கைங்கிறது டேபுள் மேட் மாதிரி... ‘டொக்... டொக்...’னு யாராவது தட்டிக்கிட்டே இருக்காங்க!
- தடாகம் முகுந்த்

மெனு கார்டை பார்த்துவிட்டு, ‘‘சாப்பிட என்ன இருக்கு’’ என சர்வரிடம் கேட்பது தமிழனின் பாரம்பரிய குணங்களில் ஒன்று...
- அம்புஜா சிமி

தற்சமயம் கையில் இல்லாத ‘நாளை மறுநாள்’ என்ற ஒரு கற்பனையான காலம் குறித்து எப்படித் திட்டமிடுவது? ஏன் திட்டமிட வேண்டும்?
- குட்டி ரேவதி

சொல்மத யானைகளால் முறிபட்ட
வனம், முயலுக்கும் அஞ்சுகிறது...
- பரமேசுவரி
திருநாவுக்கரசு

தமக்கு மறுக்கப்பட்ட அனைத்து ஆசீர்வாதங் களையும் மனமார வாழ்த்தி வழங்குகிறார்கள் திருநங்கைகள்...
# ‘‘புருஷன் புள்ளையோட நல்லாரு கண்ணு!’’
- தோழி ஹாஜிரா

இந்திய கிரிக்கெட் அணியின் டைரக்டராக நியமிக்கப்பட்டுள்ளார் ரவி சாஸ்திரி.
# படம் இனிமே ரொம்ப ஸ்லோவா நகருமே!
- ஆர்.முத்துக்குமார்

நிற்கிறேன்
கால்களின் கீழே
ஓடுகிறது பாதை

- ராஜா சந்திரசேகர்

வெறும் வசூல் சாதனைகளை வைத்து படங்களை வரிசைப்படுத்த வேண்டுமெனில், ஷகிலா படங்களே முதல் பத்து இடங்களில் அதிக இடங்களைப் பிடிக்கும்.
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

அத்தனை சுவாரசியமான, அன்பான ரயில் பயண நேரத்து மனிதர்களைப் போல நம் அக்கம் பக்க மனிதர்கள் ஏன் இல்லை என்பதே இந்த அன்றாட வாழ்வின் ஆகச்சிறந்த புதிர்!
- ஸ்ரீதேவி செல்வராஜன்

‘பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு’ என்பதை அடுத்த தலைமுறை எப்படிப் புரிந்து கொள்ளும் என்று நினைக்கவே அதிர்ச்சியாக இருக்கிறது...
- சஞ்சய் காந்தி

புன்னகை
மட்டும்
வேண்டுபவர்களுக்கு கண்ணீர் துளிகளை வைத்திருப்பவன் தேவைப்
படுவதில்லை...
- மழைக் காதலன்

twitter

@rm_anitha   
நிஜங்கள் எவ்வாறாயினும் நிழல்களில் இளைப்பாறத்தான் மனம் ஏங்குகிறது!

@GVhere       
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வருதாம்ல... இங்க உள்ளவங்க யாருக்காச்சும் போட்டி போட விருப்பம் உண்டா மக்கழே!!

@Bullet  _Ram
நம்மளவிட கறுப்பா ஒருத்தர பாக்கும்போதுதான் மனசே நிம்மதியா இருக்கு :)

@priya  1subramani    
 கையைச் சுடும் என்றாலும் தீயைத் தொடும் பிள்ளை போல் உன்னையே மீண்டும் நினைக்கிறேன்!

@arivucs  
 ‘பைசா’ என்றால் கோபுரமே சாய்ந்து விடுகிறது!

@ChuttyPonnu1 
பேசிக்கொண்டே   இருந்தால் உன்னைப் பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள்; மௌனமாக இருந்தால் நீ மற்றவர்களைப் பற்றி அறிந்து கொள்வாய்!

@ChuttyPonnu  1 
பேசிக்கொண்டே   இருந்தால் உன்னைப் பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள்; மௌனமாக இருந்தால் நீ மற்றவர்களைப் பற்றி அறிந்து கொள்வாய்!

@MissLoochu   
ஸ்மார்ட்போன் கண்ட முதல் பயன், ‘தானும் நல்ல புகைப்படக் கலைஞன்’ என்ற நம்பிக்கையை அனைவரிடமும் விதைத்ததே...

@Sowmi  _
துணிக்கடையில்   எவ்வளவு தேடினாலும் அருகில் இருக்கும் பெண்ணின் கையில் இருப்பதே சிறந்த புடவை!

@manipmp   
நமக்கான சலுகை கிடைக்காதபோதுதான் சமூகத்தின் மீது அடக்க முடியாத கோபம் வருகிறது!

@kalasal   
என்னிடம் எவ்வளவு இடைவெளி விட்டுப் பழக வேண்டும் என்று தெரிந்தவர்களே என் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்...

@gpradeesh  
நிறங்களால் பட்டாம்பூச்சிகள் அழகில்லை; பட்டாம் பூச்சிகளால்தான் நிறங்கள் அழகு!
# நடுவுல ஒரு என்டர் கீ... அப்பதான் இது கவிதை ஆகும் :)

@meenammakayal       
வெற்றி பெற்றவர்களை தகுதிக்கு மீறிப் புகழ்ந்து திமிரைக் கொடுங்கள், அடுத்த முறை நீங்கள் எளிதாக வெல்லலாம்.

@meenammakayal  @mrithulaM       
நமக்குப் பிடித்தமானவர்களை நம்மை கவனிக்க வைக்கும் முயற்சியில் குழந்தையாகித்தான் போகிறோம்!