கவிதைக்காரர்கள் வீதி



கல்யாணமாம்...கல்யாணம்...


மகளின் மணவிழா
அச்சடித்த பத்திரிகையை
சஞ்சலித்த மனதோடு
சுற்றம் உற்றம் வைத்த
வரதராஜு வாத்தியார்
எங்கும் சொல்லி வந்தார்...

எல்லோருக்கும் சொல்லல,
நெருங்கினவங்களுக்கு மட்டும்
மண்டபம் வேணாம்
வீட்டு மாடியில
ஷாமியானா போட்டுக்கலாம்
சமையலுக்கு ஆள் வேணாம்
ஓட்டல்ல சொல்லிடலாம்

மேள தாளம் வேணாம்
ஐயர் இருந்தா போதும்
ஆல்பம் கீல்பமெல்லாம் வேணாம்
ஐந்து ஆறு போட்டோ போதும்
மாப்பிள்ளை வீட்டுக்கு
லீ மெரிடியன்ல ரூம் போட்டிருக்கு
அவங்க மனசு கோணக் கூடாதுல்ல

வீம்பாய் சொல்லாமல்
விம்மிச் சொன்னார் வாத்தியார்
‘மாப்பிள்ளைக்கும்
இது ரெண்டாவது கல்யாணம்.’

ஆதி.சரவணன்