தத்துவம் மச்சி தத்துவம்



என்னதான் பட்டாசுல ‘திரி’ இருந்தாலும், அதை யாரும் எண்ணெய் ஊத்தி பத்த வைக்க மாட்டாங்க! - மூளையில் விளக்கெண்ணெய் விட்டு யோசிப்போர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

உங்க பட்டாசுக் கடைக்கு விபத்து ஏற்படா விருது தந்தாங்களாமே... எதுக்கு?’’
‘‘இந்தக் கடையில் வாங்கின பட்டாசு ஒண்ணுகூட வெடிக்கலையாம்!’’
- தீ.அசோகன், சென்னை-19.

தத்துவம் மச்சி தத்துவம்

ரயிலுக்கு ‘வரும் நேரம், புறப்படும் நேரம்’னு டைம் டேபிள் இருக்கு; ஆனா, ரயில் வெடிக்கு ‘பத்த வைக்கும் நேரம், வெடிக்கும் நேரம்’னு டைம் டேபிள் எதுவும் கிடையாது!
- ரயில் வெடியை பத்த வைக்க ரயில்வே துறையை எதிர்பார்க்காதோர் சங்கம்
- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.

இன்னைக்கு நம்ம கட்சிக்கூட்டத்தை ரத்து பண்ணிடுங்க தலைவரே...’’‘‘ஏன்யா?’’‘‘பத்த வைக்காமலேயே வெடிக்கிற வெடி இருக்கான்னு பட்டாசுக் கடையில எதிர்க்கட்சிக்காரங்க விசாரிச்சிக்கிட்டு இருந்தாங்க!’’- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.

‘‘நான் கொடுத்த புது ‘ஹியரிங் எய்ட்’ எப்படி இருக்கு..?’’
‘‘தீபாவளிக்கு பசங்க கேப் வெடிச்சாகூட ஆட்டம் பாம் சவுண்ட் கேட்குது டாக்டர்...’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

தத்துவம் மச்சி தத்துவம்

பாம்பை மாலையா போட்டுக்கிட்டவனும், பட்டாசை மாலையா போட்டுக்கிட்டவனும், காயப்படாம தப்பிச்சதா சரித்திரம் இல்லை!
- பட்டாசு மாலையை பத்த வைப்போர் சங்கம்
- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.

‘‘ஜோசியரே... இது என் மனைவியோட ஜாதகம்!’’
‘‘சரி... என்ன பார்க்கணும்?’’
‘‘தீபாவளிக்குள்ள புடவை செலக்ட் பண்ணிக்கிட்டு வீட்டுக்கு வந்துடுவாளான்னு பார்த்து சொல்லுங்க!’’
- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.