கவிதைக்காரர்கள் வீதி




தடம்

செல்லும் தடங்களிலெல்லாம்
வண்ணங்களை உதிர்த்துச் செல்கின்றது
பட்டாம்பூச்சி.
ப.மதியழகன், மன்னார்குடி.

கடவுள்

தாயின் கருவில்
குழந்தை அசைகிறது
புரண்டு புரண்டு
படுக்கிறார் கடவுள்!
ஆதி.சௌந்தரராஜன், பட்டவர்த்தி.

நிலா

குளத்தின் பரப்பை
சலனப்படுத்தாமல் குளிக்க
நிலவால் மட்டுமே முடிகிறது.
 ஏ.மூர்த்தி,புல்லரம்பாக்கம்.

குறியீடு

ரத்தம் மட்டுமல்ல
நிழலும்தான்
சமத்துவக் குறியீடு.
-ச.கோபிநாத்,சேலம்.


கசடற...

அத்விக் ‘’தாத்தா’’ என்றதும்
பனியனில் காலர் முளைத்தது.
முளைக்காதா பின்னே?
கீ போர்டு செஸ் போர்டு
பெயின்டிங் கோர்ஸ் ஆக்டிங் கோர்ஸ்
திங்கள் யூனிபார்ம் பியூர் ஒயிட்

ஏனைய நாட்கள் ஸோ க்யூட்
ஸ்கூல் பீஸ் வங்கியில்
சிலபஸ் டெல்லியில்
கசடறப் படித்த
என் திண்ணைப் பள்ளியில்
இத்தனை வித்தைகள்
கண்டதே இல்லை.

கே.ஆர்.சிதம்பரக்குமாரசாமி,சென்னை-83.