டாட்டூ எதற்கு?



அறிவுமதியின் ‘மழைத்தும்பிகள்’ வாசித்தபோது நிஜமாகவே சென்னையில் கனமழை. சுடச்சுட அவர் கவிதைகள். அடடா... சுகம் சுகம்!
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.

சாருஹாசனின் ‘அழியாத கோலங்கள்’ ஆரம்பமே சரவெடி போல் வெடித்துச் சிதறியது. அவரது பழைய நினைவுகளில் உலகநாயகனைப் பற்றிச் சொல்லும் தகவல்களை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்!-
லெட்சுமி மணிவண்ணன், சிக்கல்.

மக்களின் பண்டிகைக் கால அவசரத்தை - அவசியத்தைப் பயன்படுத்தி கட்டணக் கொள்ளையடிக்கும் ஆம்னி பஸ்களின் அட்டகாசத்தை அப்படியே புட்டுப் புட்டு வைத்துவிட்டீர்கள். இனியேனும் இதை அரசு தடுக்குமா?
- கே.வி.மகேந்திரன், திருப்பூர்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு பக்தி மணம் வீசுகிறது. அதில் குறிப்பிட்டிருந்தபடி, மனக்கவலைகள் நீங்கச் செய்யும் ‘பதிற்றுப்பத்தந்தாதி பதிக’த்தை தினமும் 12 முறை பாராயணம் செய்து வருகிறேன். நல்ல பலன் தெரிகிறது!
- எஸ்.புவனா சுந்தர், புதுச்சேரி.

எஸ்.ஜே.சூர்யாவின் சமீபக் கண்டுபிடிப்பான நிகிஷா படேலின் லுக்கே செம கிக்! எது எதற்கோ நோபல் பரிசு கொடுக்கிறாங்க... ஜோதிகா, நிலா, நிகிஷா என சூப்பர் பொண்ணுங்களைக் கண்டுபிடிக்கும் சூர்யாவுக்கு கொடுத்தால் என்ன வாம்?
- கே.சந்தியதாசன், சேலம்.

ஓவியாவின் பெயரையே டாட்டூ குத்த நாங்க ரெடியா இருக்கும்போது, அவங்க கையில் எதுக்கு கடல் குதிரை டாட்டூ? கொஞ்சம் சொல்லுங்கப்பு, சொல்லுங்க!
- கி.விமலநாதன், மதுரை.

‘உன்னைப் புரிஞ்சுக்கவே முடியலை’ என ஆண் சொல்லும் டயலாக்குக்குப் பின்னால்தான் புரிஞ்சுக்க எவ்வளவு விஷயங்கள் இருக்கு!
- எஸ்.கதிரேசன், கமுதி.

‘நீங்க சைலன்ட் காதல் மன்னனாச்சே...’ என்ற கேள்விக்கு ஹீரோக்கள் கோபப்படுவார்கள். ஆனால், ‘நிறைய பொண்ணுங்க அண்ணான்னு கூப்பிடுறாங்க’ என ஜெயம் ரவி வெளிப்படையாகச் சொன்ன விதம் ரசனை!
- எச்.சைமன், கடலூர்.

பழைய பாடல்களையும், ஒலி வடிவங்களையும் தன் கடையில் சேகரித்து வைத்திருக்கும் குணசேகரனின் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது. இசையைக் கற்பவர்கள் மட்டுமல்ல, காப்பவர்களும் இசை மேதைகளே!
- கி.ரவிக்குமார், நெய்வேலி.

பாரததேவியின், ‘கோவக்கார அய்யனார்’ நிகழ்வுகள் மர்மக் கதை படிப்பது போன்று விறுவிறுவென்றிருந்தது. மொத்தத்தில் கதை எங்களது மனதில் நிலைத்து நின்றது!
- கே.பிரபாவதி,மேலகிருஷ்ணன்புதூர்.