தங்க தேசம்



தீபாவளிக்கு தங்கம் வாங்குவது இந்தியாவில் சிலருக்கு சம்பிரதாயம்; சிலருக்கு அதிர்ஷ்டம்; சிலருக்கு ஏக்கம்; பலருக்கு ஆடம்பரம். இந்த தேசத்தில்தான், உலகில் இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட தங்கத்தில் ஐந்தில் ஒரு பங்கு குவிந்திருக்கிறது. தங்கமான இன்னும் சில தகவல்கள்...

ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 2300 கிலோ தங்கம் விற்கப்படுகிறது.

உலகில் தோண்டப்படும் தங்கத்தில் கால் பங்கு இந்தியாவுக்குத்தான் வருகிறது.

இந்தியாவில் வீடுகளிலும் கோயில்களிலும் 20 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கையிருப்பில் உள்ளது வெறும் 360 டன் தங்கம்.

உலகின் தங்க இருப்பில் 11 சதவீதம், இந்தியப் பெண்களிடம் நகைகளாக உள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து அரசுகளிடமும், ஐ.எம்.எஃப் அமைப்பிடமும் இருக்கும் தங்கத்தை விட இது அதிகம்.

30 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியர்கள் ஓராண்டில் வாங்கிய தங்கம் 65 டன். இப்போது 950 டன்.

தங்கத்தின் விலை உயர உயர, நம் ஊரில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகமாகி விட்டன; பிரிட்டனில்கூட இந்தியர்களின் வீடுகளைக் குறி வைத்து தங்க நகைகள் திருடுகிறார்களாம்!

தங்க நகைகளில் பாதியளவு திருமணத்துக்காகவே வாங்கப்படுகின்றன.