ஜோக்ஸ்




ஆனாலும் தலைவரை
இப்படியெல்லாமா
பிரபலப்படுத்தணும்?’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘அவரோட பிறந்த நாளுக்கு ‘மூன்று முறை சி.பி.ஐ. தேடி வந்த தலைவரே...’னு போஸ்டர் அடிச்சிருக்காங்க!’’
- அதிரை புகாரி,
அதிராம்பட்டினம்.

இந்த முறை தலைவர் செய்தது கொஞ்சம் காஸ்ட்லி ஊழலா?’’
‘‘ஏன் கேட்கிறே?’’
‘‘குற்றப்பத்திரிகையை வழ வழ காகிதத்துல தரமா அச்சிட்டிருக்காங்களே..!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

‘‘எதிர் வரும் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியில உள்ள ‘வாழ்த்த வயதில்லாதோர் அணி...’, ‘புகழ வார்த்தைகள் இல்லாதோர் அணி’ ஆகிய இரண்டும் உடனடியாக கலைக்கப்படுகிறது என்பதை...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘அந்த அமைச்சரை எல்லாரும் ஈசியா ஏமாத்திடலாம் போல...’’
‘‘எப்படிச் சொல்றே..?’’
‘‘வெள்ளச் சேதத்தைப் பார்வையிட ஹெலிகாப்டர்ல அழைச்சிட்டுப் போனவங்க, கடலைக் காட்டிட்டு அழைச்சிட்டு வந்துட்டாங்களாம்!’’
- சீர்காழி வி.ரேவதி, சென்னை-59.

‘‘நம்ம ஏட்டய்யாவுக்கு ஃபேஸ்புக்ல அக்கவுன்ட் ஆரம்பிச்சுத் தர்றேன்னு சொன்னது தப்பாப் போச்சு...’’
‘‘ஏன் கபாலி?’’‘‘மாமூல் பணத்தை அதுல போட முடியுமான்னு கேட்கறாரு!’’
- சி.கார்த்திகேயன், சாத்தூர்.

‘‘உடனே சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவிக்கணும்யா...’’
‘‘அவசியமே இல்ல தலைவரே! நம்ம கட்சி ஆளுங்க முக்கால்வாசிப் பேரு ஏற்கனவே ‘உள்ளே’தான் இருக்காங்க!’’
- பர்வீன் யூனுஸ்,சென்னை-44.

தத்துவம்  மச்சி தத்துவம்

வங்கில ‘இரண்டு கோடி’ பணம் போடலாம்; ‘மூணு கோடி’ பணம் போடலாம். ‘பக்த கோடி’களைப் போட முடியுமா?
- போகாத ஊருக்கு வழி தேடிக்கொண்டிருப்போர் சங்கம்
- இரா.வசந்தராசன், கல்லாவி.