6 வார்த்தையில் ஒரு கதை!



கிரிக்கெட் ‘ட்வென்ட்டி 20’ ஆக சுருங்கியாச்சு, சினிமாவின் நேரமும் சுருங்கி 2 மணி நேர படங்கள் வருகின்றன. நம்ம ஊரில் ஸ்மார்ட் போனைத் தவிர மற்ற எல்லாமே சின்னதாகிக் கொண்டுதான் வருகின்றன. கதைகள் மட்டும் என்ன விதிவிலக்கா? அந்தக் காலத்தில் நீட்டி முழக்கி நாவல் படிக்க நேரமிருந்தது. பிற்காலத்தில் ‘சிறுகதைதான் இனி’ என ஒரு சீஸன் வந்தது. அப்புறம், ‘உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்... ஒரு பக்கக் கதைன்னா படிக்கிறோம்’ என்றார்கள் வாசகர்கள்.

இப்போது அதுவும் சுருங்கியாச்சு. சோஷியல் மீடியாவே சோலியாகக் கிடக்கும் எழுத்தாளர்கள் பலர் இப்போது ஆறே வார்த்தைகளில் கதை எழுதலாம் என வரிந்து கட்டிக் கிளம்பிவிட்டார்கள். இதற்கென்றே தனி இணையதளம், சோ.மீடியா பக்கங்கள், காரசார ஃபோரம்கள் எனப் பற்றி எரிகிறது. சமீபத்தில் ‘நேரேடிவ்’ என்ற ஆங்கில இலக்கியப் பத்திரிகை ஆறு வார்த்தை கதைகளுக்காக பரிசுப் போட்டியே அறிவித்திருக்கிறது. திருக்குறளே ஏழு வார்த்தையாச்சே... அப்படி என்ன சொல்லிவிடுகிறார்கள் ஆறே வார்த்தையில்? இதோ சில சாம்பிள்ஸ்...