facebook வலைப்பேச்சு




பீஸ்ஃபுல்லா போனா பேச்சிலர் வாழ்க்கை... பீஸ் பீஸா போனா கல்யாண வாழ்க்கை!
- சித்தன் கோவை

பன்னீர்
பூக்கள் உதிர்ந்து கிடக்கும்
மழை இரவுக்குப் பின்பான விடியலைப் போல
மன மகிழ் வாழ்வு!
கடங்கநேரி
யான்

நாம்தான் எல்லாவற்றையும் எண்களாகவே பார்க்கிறோமே. ‘உனக்கு என்ன வயசு’, ‘எவ்வளவு சம்பளம்’, ‘எவ்வளவு பவுன் போடுறாங்க’, ‘எவ்வளவு வசூல் ஆச்சு’, ‘எவ்வளவு சார் லோன் வேணும்’ என்று ஒரு நாளில் எவ்வளவு முறை எண்களைப் பயன்படுத்துகிறோம்? எண்கள் மட்டும் இல்லையென்றால் நமக்கு கைகள் உடைந்த மாதிரி ஆகிவிடும்...
- வா.மணிகண்டன்

நர்சரி ஸ்கூல் பிரின்சிபால் கூட தன்னை ‘முதல்வர்’னு சொல்லிக்க முடியுது... பாவம், அவரால முடியலையே..!
-வெங்கடேஷ் ஆறுமுகம்

ராகுல் என்ற புலி பதுங்கி
யுள்ளது, அது விரைவில் பாயும்: ஈவிகேஎஸ்
:>>புலி எனக்கு பால் கொடுத்துச்சு... அன்னில இருந்து எனக்கு புலிப்பாண்டின்னு பேரு வந்துருச்சு!
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

குட்டிக்_கதை
கடவுள் வேஷம் போட்டு யாசகம் கேட்பவர்களை விட, பேசாமல் சிலையாய் நிற்கும் கடவுள் அதிகம் சம்பாதிக்கிறார்
நீதி: பேச்சைக் குறை
- கீர்த்தி மணியம்

தனிமை தன் விருப்பம்போல தன்னை அலங்கரித்துக் கொள்ளும்
- சுந்தரி விஸ்வநாதன்

ஊகங்களுக்கும் வரையறுத்தல்களுக்கும் நடுவே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது உண்மை.
- சாந்தி மாரியப்பன்

எப்பவும் கஷ்டத்துல இருக்குறவங்களுக்கு உதவணும். அப்பதான் அவங்க நம்மள மறக்காம நினைச்சுப்பாங்க, அடுத்த தடவ அவங்களுக்கு கஷ்டம் வரும்போதும்!
- செல்லி சீனிவாசன்

மூத்திர சந்து ட்ரீட்மென்ட்டுக்கு வாலண்டியராய் போய் வண்டி ஏறுவதே இல்வாழ்க்கை எனப்படும்.
- வெங்கடேஷ் ஆறுமுகம்

சீன அதிபரின் மனைவி குளிரால் நடுங்கியபோது ரஷ்ய அதிபர் தனது கோட்டைக் கழற்றி அவருக்குப் போர்த்தி விட்டார்.
# நிறைய எம்.ஜி.ஆர்.
படம் பார்த்திருப்பாரோ?
- கோவை பாலா

ஏ.டி.எம்.ல அஞ்சு தடவைக்கு மேல நீ எடுக்கிற பணம் அடுத்தவனோடது!
- ஸ்ரீப்ரியா எஸ்பி

twitter வலைப்பேச்சு

@karunaiimalar
 உலகத்தில் மிகச் சிறந்த காதல் ஜோடி செருப்பு மட்டுமே... ஒண்ணு இல்லைன்னா இன்னொன்று வாழவே வாழாது; வாழ்ந்தாலும் வேஸ்ட்!

@navi_n 
 ஏமாந்தவரிடமே மறுபடியும் ஏமாந்துவிடக்கூடாது என்பதையாவது குறைந்தபட்சம் ஏமாற்றத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

@mpgiri
சந்தைன்னா மலிவு விலை காய்கறி விக்கிற இடம்; மார்க்கெட்னா விலை அதிகமா விக்கிற இடம்...
# தமிழனின் கண்டுபிடிப்புகள்!

@meenammakayal 
பணத்தால் அன்பை விலைக்கு வாங்க முடியாதென்பது எந்த அளவுக்கு பொய்யோ, அதே அளவுக்கு உண்மையும் கூட!

@jeranjit
ஒருவர் இறந்தபின் அவர் நல்லவரென சொல்ல எல்லோருக்கும் ஒரு கதை இருக்கிறது!

@ThePayon   
என் வீட்டில் எனக்கு வரம்பில்லா அதிகாரம் உள்ளது. ஆனால் அதைப் பயன்படுத்த அனுமதி இல்லை.

@revathy_rr
ஒரு கரண்டி மாவுதான். எங்கே, எதிலே, எப்படி ஊற்றப்படுகிறதுங்கிறதுதான் அதோட வெரைட்டியை முடிவு செய்யுது :)

@nizam dheen10 
 கொஞ்சம் தவறுகளோடு மனிதர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு, விரைவில் சுவர்களோடு மட்டும் பேசும் நிலை வரலாம்.

@RajiTalks 
 அட்வைஸ் சொல்லுறவனும் ஆடு வெட்டுறவனும் ஒண்ணு... நாம அவங்கள கவனிச்சு லேசா தலைய அசைச்சிட்டா போதும்... அறுத்துடுவாங்க!

@urs_priya
 பாஸ்வேர்டை ரகசியமாக வைக்கத் தெரிந்த அளவு ரகசியத்தை ரகசியமாக வைக்க முடிவதில்லை!

@writercsk
 விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, முட்டாள்தனம்... இவற்றால் ஆனது அன்பு.

@mrithulaM
பக்கத்து வீட்டிலிருந்து சண்டைச் சத்தம் கேட்டதும் ரிமோட்டை தேடுகிறது கை, டி.வி. சத்தத்தைக் குறைக்க!

@writernaayon 
பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்கிறவர்களை மூக்கைப் பொத்திக்கொண்டே கடக்கிறார்கள், அந்நாற்றத்திற்குக் காரணமானவர்கள்.

@ThirutuKumaran
 ‘‘நான் மனசுல எதும் வச்சுக்க மாட்டேன்’’ என்று சொல்லும் பெண்களே ஒரு லோடு மேட்டர் வச்சிருப்பாங்க! # நோ கமெண்ட்ஸ்

@nellairaja72   
சாப்பிடுற விஷயத்தில் ‘வேணுமா... வேணுமா...’ன்னு கேட்பதில் தாய்க்கு அடுத்தபடி ஹோட்டல் சர்வர்தான்!