நியூஸ் வே



தமன்னாவிற்கு இந்தியிலும் படங்கள் இல்லை. தெலுங்கில் கிட்டத்தட்ட மார்க்கெட் இழந்துவிட்டார். அதனால் சென்னையில் வந்து தங்கும் யோசனைக்கு வந்துவிட்டார். புது வீடியோ ஷூட், போட்டோ செஷன் எடுத்து முக்கிய ஹீரோக்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புகிறார். அடுத்த ஆண்டில் நிறைய ஹீரோக்களோடு மறுபடி அவரைப் பார்க்கலாம்.

அஜித், ஏ.ஆர்.முருகதாஸ் இரண்டு பேரும் இணைவதற்கான அறிகுறிகள் இருந்தன. ‘கத்தி’ கதை சம்பந்தமாக விஸ்வரூபமாக எழுந்த விவாதங்களுக்குப் பிறகு ‘இப்போதைக்கு முருகதாஸ் படம் வேண்டாம்’ என முடிவு செய்துவிட்டார் அஜித்.

எத்தனையோ வெளிநாடுகள் சென்று வந்தாலும், விஜய்க்கு பிடித்தது துபாய்தான். அங்கே உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் இருக்கும் அர்மானி சொகுசு ஹோட்டல் விஜய்க்கு ஃபேவ ரிட். அங்கே கிடைக்கும் உணவு வகைகள் எல்லாமே இஷ்டமாம்.

அப்பா கன்னடம், அம்மா ஆந்திரா என டபுள் ஸ்டேட் காம்பினேஷன் பொண்ணு சனம் ஷெட்டி. எலட்ரானிக் எஞ்சினியரிங் படிப்பு முடித்து விட்டு மாடலிங் டு சினிமா என என்ட்ரியான சனம் கையில் தமிழில் மட்டும் இப்போது மூன்று படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

சந்தானம் இப்போது புதிதாக தயாரிக்கிற படத்திற்கு பெயர் வைக்கவில்லை. அதன் டைரக்டர்களாக முருகன், பிரேம் ஆனந்த் என இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் சேர்த்து ‘முருகானந்தம்’ என பெயர் வைத்துவிட்டார் சந்தானம். நல்லாயிருக்கே பாஸ்!

கேரள சுற்றுச்சூழலைக் காக்கும் முயற்சியில் துணை நிற்க மலையாளத் திரையுலகினர் முடிவெடுத்துள்ளனர். இதன் முதல்கட்டமாக வினைல் போன்ற ஃபிளக்ஸ் விளம்பரங்களைத் தவிர்த்து, மக்கும் குப்பைகளாக மாறும் பொருட்களைக் கொண்டு பட விளம்பரங்களை செய்ய உள்ளனர். இந்த முயற்சியின் முன்னோட்டத்தை மம்முட்டி தனது படத்தில் தொடங்கி வைத்து பெருமை சேர்த்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகி இருக்கும் மம்முட்டியின் ‘வர்ஷம்’ படத்தின் போஸ்டர் உள்பட எந்த டிசைனும் வினைல் விளம்பரங்களாக வரவில்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் ஜீவா. இனி இறங்கி அடிப்பது என தீர்மானித்துவிட்டார். ‘யான்’ படமும் அவருக்குப் பெருமை தருவதாக இல்லை. அதனால் அல்லுசில்லு, டாஸ்மாக் காமெடிக்கு மறுபடியும் இறங்கிவிட்டார். லோக்கல் குத்துப்பாடல்களும் நிறைய உண்டு. நயன்தாராவை ‘ஈ’ படத்தின் நட்பில் கேட்க, அவரும் இணைந்து நடிக்க ஓகே சொல்லிவிட்டார்.

பாலாஜி மோகனின் அடுத்த படமான ‘மாரி’யில் நடிக்கிறார் தனுஷ். படத்தை 40 நாட்களில் முடிக்கச் சொல்லி முழு கால்ஷீட்டை கொடுத்து விட்டார். அவரின் படங்களில் இதுதான் துரித கால தயாரிப்பு; துரித கால சம்பளமும் கூட...

விக்ரம் வெகுநாட்களாக சிக்கிமில் இருக்கிறார். அங்குதான் விஜய் மில்டனின் படம் ரெடியாகிறது. ரோடு மூவி என்பதால் இங்கேயிருந்து சிக்கிம் வரை போய், அங்கேயிருந்து கோவை வரைக்கும் படக்குழு பயணிக்கிறது. ‘‘இப்படி யொரு முழு ரோடு மூவி தமிழில் வந்ததில்லை’’ என்கிறார்கள். விக்ரம்னா வித்தியாசம்தானே!

திருமணத்திற்குப் பிறகு டைரக்ஷனில் பிஸியாகி விட்டார் விஜய். மனைவி அமலாபால் நடிப்பில் பிஸி. மலையாளத்தில் மோகன்லாலுடன் நடிக்கிறார் அமலாபால். அதில் அவருக்கு 3 கெட் அப்கள். இதற்காகவே இந்தப் படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அமலாபால். படத்தில் இன்னொரு ஸ்பெஷலும் உண்டு. இதில் அமலாபாலின் தம்பி அபிஜித் பால் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

மும்பையில் பத்மப்ரியாவுக்கு டும் டும் டும். நடிப்புக்கு பிரேக் விட்டு படிப்பிற்காக நியூயார்க் சென்றிருந்த பத்மப்ரியா, அங்கே குஜராத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் எஞ்சினியர் ஜாஸ்மைன் என்பவரை சந்தித்திருக்கிறார். அது காதலாகி, திருமணம் வரை சென்றுவிட்டது. திருமணத்திற்குப் பிறகும் நல்ல கேரக்டர்கள் வந்தால் தொடர்ந்து நடிப்பாராம் பத்து!

முதன்முறையாக நாடக, நடன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் சுஹாசினி. சென்னை மியூசிக் அகடமியில் வரும் 28ம் தேதி அன்று நடைபெற உள்ள இந்த டான்ஸ் கான்செப்டிற்கு ‘அந்தரம்’ என பெயர் வைத்துள்ளனர். கிருத்திகா சுப்ரமணியனின் பரதநாட்டியம், கோபிகா வர்மாவின் மோகினி ஆட்டம், யாமினி ரெட்டியின் குச்சுப்பிடியும் இதில் இடம்பெறுகிறது. சுஹாசினியின் பகுதியை அவரே எழுதியிருக்கிறார்.

‘ஃபை... ஃபை... கலாச்சுஃபை...’ பாடிய நடிகை ரம்யா நம்பீசன், அடுத்து ‘கதம் கதம்’ படத்திற்காக தாஜ்நூர் இசையில் ‘வட போச்சே...’ என்ற பாடலைப் பாடியுள்ளார்.

பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு நிஜமான ஒரு விளம்பரத் தூதர் கிடைத்து விட்டார். அவர், மகாராஷ்டிராவின் சாய்கேதா கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா. தன் புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லை என்பதை உணர்ந்தவர், தன் தாலியை விற்று கழிப்பறை கட்டியிருக்கிறார்.மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பங்கஜ் முண்டே அவரைக் கூப்பிட்டு நெகிழ்ச்சியோடு பாராட்டி இருக்கிறார்.

பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு நிஜமான ஒரு விளம்பரத் தூதர் கிடைத்து விட்டார். அவர், மகாராஷ்டிராவின் சாய்கேதா கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா. தன் புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லை என்பதை உணர்ந்தவர், தன் தாலியை விற்று கழிப்பறை கட்டியிருக்கிறார்.மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பங்கஜ் முண்டே அவரைக் கூப்பிட்டு நெகிழ்ச்சியோடு பாராட்டி இருக்கிறார்.

‘ஐ’ படத்தை முடித்துவிட்டு, சூர்யாவின் ‘மாஸ்’ படத்தில் கமிட் ஆகியிருக்கிறார் எமி ஜாக்சன். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயின் நயன்தாரா. சூர்யா - எமி காம்பினேஷன் ஷூட் முழுக்க முழுக்க ஃபாரீனில் எடுக்க உள்ளனராம்.

 ‘‘ஐ லவ் தமிழ் சினிமா’’ என உதட்டை சின்னதாக சுழித்துக்கொண்டே சொல்லும் நீலம் உபாத்யாய், மும்பை பொண்ணு. ஸ்ரீகாந்துடன் நடித்து வரும் நீலம் இதற்கு முன் தெலுங்கில் சில படங்கள் பண்ணியிருக்கிறார். மாடலிங்கிலிருந்து சினிமாவிற்கு வந்திருக்கும் நீலத்தின் உயரம் 5.6 அடி. அதாவது அனுஷ்காவின் அம்மாடியோவ் உயரத்திற்கு 2 இன்ச்தான் கம்மி!