ஜோக்ஸ்



‘‘பிறந்தநாள் விழாவுக்கு வந்தவர்கள் அனைவரும் ‘தலைவரை வாழ்த்த வயதில்லை’ என்று சொன்னபடியால்...
தன்னைத்தானே வாழ்த்திப் பேசிக்கொள்ள தலைவரை அழைக்கிறோம்...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘உங்க மேலே செருப்பு, முட்டை, தக்காளிகளை வீச வேணாம்னு ஜனங்ககிட்ட வித்தியாசமான முறையில் சொல்லி இருக்கோம் தலைவரே!’’
‘‘எப்படிய்யா?’’
‘‘மேடையைச் சுத்தி ‘எறிபொருட்களை வீணடிக்காதீர்’னு எழுதியிருக்கோம்!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

தத்துவம் மச்சி தத்துவம்

 பாலை காய்ச்சினா தான் நுரை வரும்; பீரை திறந்தாலே நுரை வரும்... மக்களே, யோசிங்க!
- தூங்கும் மக்களை
அவ்வப்போது
தட்டி எழுப்புவோர் சங்கம்
- அனார்கலி,
தஞ்சாவூர்.

 பாலை காய்ச்சினா தான் நுரை வரும்; பீரை திறந்தாலே நுரை வரும்... மக்களே, யோசிங்க!
- தூங்கும் மக்களை
அவ்வப்போது
தட்டி எழுப்புவோர் சங்கம்
- அனார்கலி,
தஞ்சாவூர்.

‘‘பாதிக் கூட்டத்துல எழுந்து போறாங்களே... யாருய்யா அவங்கெல்லாம்?’’
‘‘நாம வாங்கிக் கொடுத்த சரக்கோட போதை தெளிஞ்ச நம்ம தொண்டர்கள்தான் தலைவரே..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘கால் கட்டை பிரிச்ச பிறகு ஒரு வாரத்துக்குக் கையை பிடிச்சுக்கிட்டு நடங்க...’’
‘‘அதுக்கு உங்க நர்ஸ் ஒத்துப்பாங்களா டாக்டர்..?’’
- வி.சாரதி டேச்சு,
சென்னை-5.

‘‘எங்க வீட்டு மாமியார் - மருமகள் சண்டை அநியாயத்துக்கு எல்லை தாண்டிப் போயிடுச்சு...’’
‘‘ஏன்... என்ன ஆச்சு?’’
‘‘இங்கிருந்து பஸ் பிடிச்சுப் போய் சித்தூர் பார்டர் தாண்டி இறங்கி சண்டை போடறாங்களே...’’
- சரவணன், கொளக்குடி.