ரஜினி புராணம்!



அட்டையில் இளமை ‘லிங்கா’! ‘நெட்டில் வலம் வந்த சூப்பர்ஸ்டார் ஜோக்ஸ்’, ‘பன்ச் டயலாக்குகளுக்கு புது விளக்கம்’... அப்பப்பா, ‘ரஜினி புராணம்’ பாடுவதில் தங்களுக்கு நிகர் யாருமில்லை!
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

‘ஜீவனாம்சம் ஏன்? எப்படி? எவ்வளவு?’ கட்டுரை யூஸ்ஃபுல். அதிலும் கணவன் ‘பிச்சை’ எடுத்தாவது ஜீவனாம்சம் தரவேண்டும் என சட்டம் சொல்வது மனசைக் கலக்கி விட்டது.
- மணிமாறன், திருவண்ணாமலை.

கிசுகிசுக்களை தைரியமாக எதிர்கொள்கிறார், லிப்லாக் கிஸ் காட்சிகளுக்கு சம்மதிக்கிறார், ஆனால், கவர்ச்சி காட்ட மாட்டேங்கிறார். இருந்தாலும் அந்த ‘போல்ட் கேர்ள்’ லட்சுமி மேனனை புரிஞ்சிக்கவே முடியலை சாமி!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

அந்தத் ‘தீ நாக்கு துறவி’ பேசியதை இந்திய மக்கள் ஏற்கவில்லை. ‘மோடியின் தூய்மை இந்தியாவில் இம்மாதிரியான அழுக்குப் பேச்சுக்கு இடமுண்டா?’ எனக் கேள்வி எழுப்பிய கட்டுரை செம சூடு!
- கவியகம் காஜுஸ், கோவை.

இப்போதெல்லாம் மொபைல் போன் முதல் முறுக்கு பாக்கெட் வரை ஆன்லைனில் விற்கலாம். ஆனால், பிரணாப் முகர்ஜியின் புத்தக த்தையும் அதே விதத்தில் காசாக்கப் பார்ப்பது ஆதங்கத்தைத்தான் கிளப்புகிறது!
- ‘மண்வாசனை’ சாரதாமணி, சுந்தராபுரம்.

2015ல் அதிக படங்களில் தோன்றி கலக்கப் போவது நயன்தாராவும், ஹன்சிகாவும்தானா... அதிலும் நயனுக்கு முதலிடமா? வாவ்! அதான் ஜிம் உடம்பில் சும்மா ‘ஜம்’முன்னு போஸ் கொடுத்திருக்கிறாரா?
- டி.ஆர்.ஏழுமலை, திண்டுக்கல்.

பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணத்துக்கும் தானாக தேடிக் கொள்ளும் உறவுக்கும் உள்ள வேறுபாட்டை சாருஹாசனின் தந்தை சற்று கடுமையான வார்த்தையால் விளக்கியிருப்பதை ஜீரணிக்க முடியவில்லை!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

‘மரத்தில் விளையுது மின்சாரம்’ என மின்சாரம் தயாரிக்கும் முறையை படத்துடன் தந்து அசத்திவிட்டீர்கள். இனி, நமது குட்டி விஞ்ஞானிகளே இங்கு மின்சாரம் தயாரிக்க
ஆரம்பித்துவிடுவார்கள்!
- இரா.கல்யாணசுந்தரம், அனுப்பானடி.

சென்னையில் மோனோ ரயில் அமைப்பது, இமயமலையை இரு கரங்களால் தூக்க முயற்சிப்பது போன்றது. அதுபற்றிய உங்கள் ஆராய்ச்சியும் கருத்துக்களும் ஆணித்தரம்!
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

உயிர் காக்கும் மருந்துகளின் விலையை உயர்த்துவதன் மூலம் ஏழைகள் உயிர் வாழவே கூடாது என்ற கருத்துதான் இங்கு நிலைநிறுத்தப்
படுகிறது. சமூக அக்கறையோடு அதைக் கண்டித்ததற்கு நன்றி!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.