பணம் தரும் படிப்பு எது?



ஆம்! இந்த 100 பேரில்...

‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் டாப் 100 பணக்காரர் பட்டியலை வைத்து, ‘என்ன படித்தால் பணக்காரர் ஆகலாம்?’ என அலசிப் பார்த்தால், ‘எதுவுமே படிக்கத் தேவையில்லை’ என்பதே பதிலாக இருக்கும். இவர்களில் பில் கேட்ஸ், ‘ஃபேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் போன்றவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்கள்.

இந்த 100 பேரில் எஞ்சினியரிங் படித்த 22 பேரிடமும் சராசரியாக தலா சுமார் 1 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. அடுத்த சொத்து மதிப்பில், டிகிரியே வாங்காதவர்கள் வருகிறார்கள். இதேபோல அறிவியல் படிப்பவர்களை விட ஆர்ட்ஸ் படிப்பவர்கள் அதிகம் பணம் ஈட்டுகிறார்கள்.

இந்த உலகின் டாப் 100 பணக்காரர்களில் 39 பேர் அமெரிக்காவில் உள்ளனர். ஜெர்மனியில் 8 பேர்; சீனாவில் 6 பேர்; இந்தியாவில் 5 பேர். ஒட்டுமொத்த ஆப்ரிக்க கண்டத்திலிருந்தும் ஒரே ஒருவர்! மற்ற 41 பேர் பல நாடுகளில் உள்ளனர்.