வில்லனா பார்த்திருக்கியா?



‘‘சூர்யாவை ஆக்‌ஷன்ல பார்த்திருப்ப... சென்டிமென்ட்ல பார்த்திருப்ப... ஆனா, வில்லனா பார்த்திருக்கியா?’’ என பன்ச் அடித்தது போலிருந்தது ‘24’ பட இயக்குநரின் பேட்டி!
- நாகவல்லி, சென்னை-20.

அமவுன்ட்டுக்காக பள்ளி நடத்துகிறவர்களுக்கு மத்தியில், தாமிரபரணி ஆற்றைக் காக்க மாணவர்களைத் தயார் செய்யும் பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வராஜ் வாழ்க!
- கோபி, திருத்துறைப்பூண்டி.

கவித்துவமாகவும், எளிமையாகவும் இருக்கும் நா.முத்துக்குமாரின் தொடர் ஒவ்வொரு வாரமும் எங்களையும் கவிஞர்களாக மாற்றி வருகிறது என்பது நிச்சயம்!
- எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.

விமான டிக்கெட்டே கண்டபடி விலை இறங்கியிருக்கிறது. சும்மா தாஜ்மகாலை உயரத்தில் இருந்து சுற்றிக் காட்டும் பலூன் பயணம், 16 ஆயிரம் ரூபாயா? அஸ்கு புஸ்கு ஆக்ரா!
- எல்.சாந்தி கணேஷ், புதுச்சேரி.



இப்படியும் செய்வார்களா என்பதை விட இதையும் சொல்வார்களா என்ற ஆச்சரியம்தான் மேலிடுகிறது மனோபாலாவின் ‘நான் உங்கள் ரசிகன்’ தொடரைப் படிக்கும்போது!
- இரா.குணசேகரன், புதுக்கோட்டை.

பேய் மழை அடிக்கும் சமயத்திலும் மழையை வைத்து நையாண்டி துணுக்குகள் வெளியிட்டு எங்களை ‘சிரிப்பு மழை’யில் நனைய வைத்து விட்டீர்கள். பாராட்டுகள்!
- ஜெ.உத்தமன், திருப்பூர்.

விவசாயம் என்றாலே முகம் சுளிக்கும் இந்தக் காலத்தில் வில்லன் நடிகர் கிஷோர் இயற்கை விவசாயம் செய்து வருவது பரவசம் தந்தது. அவருக்குள் இப்படியொரு நிஜ ஹீரோவா?
- சி.வி.யசோதா சுந்தர், தேனி.

அக்ரிமென்ட் போட்டு  திருமணமா? கட்டுரையைப் படிக்கும்போதே அதிர்ச்சியாக இருந்தது. மேற்கத்திய நாடுகள் ேபால முதல்ல பிரிட்ஜ் கட்டுங்கப்பா... அப்புறம் கல்யாணம் கட்டலாம்!
- கே.கந்தசாமி, கரூர்.

கார்கில் போரில் கால்களை இழந்த தேவேந்தர் பால் சிங், செயற்கைக் கால்களால் மரத்தான் ஓடுவது மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்குமே தன்னம்பிக்கை டானிக்!
- பி.ஸ்டீபன், நாகை.

காதலைப் பிரித்து வைக்க ஒரு இணையதளத்தை இரு சகோதரர்கள் நடத்துகிறார்களா? இந்தியாவுக்கு வரச் சொல்லுங்கள்... ஒரு காதலைக் கொண்டு அந்த சகோதரர்களைப்
பிரித்துவிடலாம்!
- டி.வி.வஜ்ரவேல், தூத்துக்குடி.
(‘கிரகங்கள் தரும் யோகங்கள்’ தொடர் இந்த இதழில் இடம் பெறவில்லை!)