அர்ப்பணிப்பை போற்றுவோம்




+2 தமிழில் முழு மதிப்பெண் பெறுவதற்கான வழிகாட்டுதல் எளிமையாகவும் நம்பிக்கை ஊட்டும் வகையிலும் இருந்தது. போகிற போக்கில் தகவல்களைச் சொல்லிச்
செல்லாமல் மாணவர்கள் செய்யும் தவறுகளை அனுமானித்து எழுதியிருக்கிறார் ஆசிரியர் ஜெயராணி.
- எஸ்.சிவக்குமார், கும்பகோணம்.

வாகனத்தின் சக்கரத்துடனே திரும்பி வழிகாட்டும் ஹெட்லைட் கண்டுபிடிப்பு, அபாரம். ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழக இயந்திரவியல் மாணவர்களை நினைத்து பெருமிதமாக இருந்தது. எதிர்காலத்தில் இந்தியாவின் தொழில்நுட்பம் உலகை வெல்லத்தான் போகிறது.
- கே.கல்யாணராமன், மதுரை.

‘வேலை ரெடி’ பகுதியில் வரும் தகவல்கள் படுதுல்லியம். தேவையில்லாத தகவல்களைச் சொல்லாமல், தேவையான
செய்திகளைத் தவிர்க்காமல் ரத்தினச் சுருக்கமாகத் தருகிறீர்கள்!
- ஆர்.ராஜலட்சுமி, தூத்துக்குடி.

‘ஆசிரியர் பணி ஒரு தவம்!’ என்ற கட்டுரையில், கோவை மாவட்டம் ராமம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி பற்றிய தகவல்கள் அருமை. தனது கனவை நனவாக்கிக் கொண்டதோடு பள்ளியையும் முன்மாதிரியாக உருவாக்கிய உதவி தலைமை ஆசிரியர் ஃபிராங்கிளினின் அர்ப்பணிப்பைப் போற்றுவோம்.
- எம்.சரவணன், திருப்பூர்.

இந்தியா முழுவதுமுள்ள சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றுத்தரும் நிணீtமீ தேர்வு பற்றிய கட்டுரை முழுமையானது. தேர்வுப் பாடத்திட்டம் முதல் விண்ணப்பிக்கும் வழிமுறை வரை எல்லா தகவல்களையும் நிறைவாகத் தந்திருக்கிறார் கல்வியாளர் ராஜராஜன். அவருக்கும், ‘குங்குமச்சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி’க்கும் நன்றி!
- எஸ்.பி.ராஜசேகர், கரூர்.

மாநகராட்சிப் பகுதியில் வசிப்பவர்கள், நகராட்சிப் பகுதியில் வசிப்பவர்கள், கிராமங்களில் வசிப்பவர்கள் என பகுதிவாரியாகப் பிரித்து இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு வழிகாட்டிய விதம் அருமை. வாழ்த்துகள்!
- வீ.மணிகண்டன், தேனி.