நிலக்கரி நிறுவனத்தில் 832 பணியிடங்கள்... நீங்கள் ரெடியா?



மத்திய நிலக்கரி நிறுவனத்தில் பெரும் எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகள்

அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கும் டிப்ளமோ படித்தவர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மத்திய நிலக்கரி நிறுவனங்களில் ஒன்றான சி.சி.எல், ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது ஏராளமான பணியிடங்களை நிரப்ப தொடர்ச்சியாக அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து ஒரு அறிவிப்பின்படி செக்யூரிட்டி கார்டு, அசிஸ்டன்ட் ரெவின்யூ இன்ஸ்பெக்டர், அக்கவுன்டன்ட் ஆகிய பணிகளுக்கு 527 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதில் செக்யூரிட்டி கார்டு பணிக்கு மட்டும் 500 பேர் தேவைப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு அறிவிப்பின்படி எலெக்ட்ரீஷியன், டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 305 பேர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். எலெக்ட்ரிக்கல் 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்களுக்கும், 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. எலெக்ட்ரீஷியன் பட்டயம் படித்தவர்களுக்கும் எலெக்ட்ரீஷியன், டெக்னீஷியன் பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன. மைனிங் சர்வே, ஓவர்மேன், கேஸ் டெஸ்டிங், ஃபர்ஸ்ட் எய்டு போன்ற சான்றிதழ் பெற்றவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பள்ளியில் என்.சி.சி. சான்றிதழ் பெற்றவர்கள், விளையாட்டுகளில் குறிப்பிட்ட சாதனை படைத்தவர்கள் செக்யூரிட்டி கார்டு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

செக்யூரிட்டி கார்டு பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரீஷியன், டெக்னீஷியன் பணிக்கு 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்புத் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இந்தக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

செக்யூரிட்டி கார்டு மற்றும் எலெக்ட்ரீஷியன், டெக்னீஷியன் போன்ற பணிகளுக்கு ஆன்லைன், ஆஃப் லைன் இரு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பிப்பவர்கள், நகல் விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ் நகல்கள், சுய முகவரியிட்ட அஞ்சல் உறை ஆகியவற்றுடன் இணையதளத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

செக்யூரிட்டி கார்டு உள்ளிட்ட 527 பணிகள் மற்றும் எலெக்ட்ரீஷியன், டெக்னீஷியன் உள்ளிட்ட 305 பணிகள் ஆகிய இரண்டு அறிவிப்புகளுக்குமே விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2014.
விரிவான விபரங்களுக்கு: www.ccl.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.