பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை தயார் மிஸ் பண்ணாதீங்க!



4000  பெண்களுக்கு....  1000 மாற்றுத்திறனாளிகளுக்கு  உதவித்தொகை தயார்  மிஸ் பண்ணாதீங்க!
.
நம் நாட்டின் உயர்கல்வி அமைப்பில் கல்லூரிக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் இரண்டு அமைப்புகளிடம் உள்ளது. ஒன்று .T.C என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு.  அடுத்து AICTE என்று அழைக்கப்படும் ‘ஆல் இந்தியா கவுன்சில் ஃபார் டெக்னிக்கல் எஜுகேஷன்’ அமைப்பிற்கு. பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டுமானால் AICTEதான் அனுமதி வழங்க  வேண்டும்.  

இந்த அமைப்பு கல்விக்கான உதவித்தொகையை, பிரகதி (PRAGATI) எனப்படும் திட்டத்தின்கீழ் பெண்களுக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த இரண்டு உதவித்தொகை திட்டங்களுக்கும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பெண்களுக்கான (PRAGATI)  உதவித்தொகை:

இந்த ஆண்டு 4,000 பெண்களுக்கு வழங்க இருக்கிறார்கள். ரூ.30 ஆயிரம் அல்லது உண்மையான டியூஷன் பீஸ், இதில் எது குறைவானதோ அது வழங்கப்படும். மற்றும் கல்வி தொடர்பான இதர செலவினங்களுக்காக பத்து மாதங்களுக்கு மாதம் ரூ.2,000 வீதம் வழங்கப்படும்.

தகுதி:

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்குக் குறைவாக இருக்க வேண்டும். AICTE அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ மற்றும் இளநிலை பட்டப்படிப்பு நிலையிலான படிப்புகள்/கோர்ஸ்களில் சேர்ந்திருக்க வேண்டும்.   2014-2015ல் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான  உதவித்தொகை:

இந்த ஆண்டு 1000 பேருக்கு வழங்க இருக்கிறார்கள்.  ரூ.30,000 அல்லது டியூஷன் பீஸ், இதில் எது குறைவானதோ அது மற்றும் கல்வி தொடர்பான இதர செலவினங்களுக்காக மாதம் ரூ.2,000 வீதம் 10 மாதங்களுக்குக் கிடைக்கும்.
தகுதி:

மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்பத்தின் ஆண்டு வருமானம், ரூ.6 லட்சத்திற்குக் குறைவாக இருக்க வேண்டும்.
AICTE அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ மற்றும் இளநிலை பட்டப்படிப்பு நிலையிலான படிப்புகள்/கோர்ஸ்களில் சேர்ந்திருத்தல் வேண்டும். கல்வி ஆண்டு 2014-2015ல் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

2014-2015 கல்வி ஆண்டு காலத்தில் AICTE அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பப் படிப்புகள்/கோர்ஸ்களில் முதலாம் ஆண்டில் ஏற்கனவே சேர்ந்துள்ள தகுதிவாய்ந்த மாணவர்கள் AICTE போர்ட்டல்www.aicteindia.org >students>scholarships  ல் உள்ள நிர்ணயிக்கப்பட்டுள்ள படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட சான்றொப்பமிடப்பட்ட pdf   வடிவிலான நகல்களை இணைப்பாக சேர்த்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இமெயில் மூலம் rifd.aicte.india@gmail.com இணையதளத்தில் அக்டோபர் 30 வரை
சமர்ப்பிக்கலாம்.

அலுவலக முகவரி:


ஆல் இந்தியா கவுன்சில் ஃபார் டெக்னிக்கல் எஜுகேஷன், 7வது தளம், சந்தர் லோக் பில்டிங் ஜன்பத், புதுடெல்லி - 110 001, போன்: 011-23724150 / 55.