வான் இயற்பியல் படிப்புக்கு வையகமெங்கும் வேலை



நம் பூமி, சூரிய மண்டலம் மற்றும் பிற கோள்கள் தோன்றிய விதம், அவற்றின் அமைப்புகள், அவற்றிலுள்ள வேதிப்பொருட்கள் மற்றும் உயிரினங்கள் தோன்றிய விதம் குறித்து படித்தறியும் இயற்பியலின் ஒரு பிரிவே வான் இயற்பியல் (Astrophysics) எனப்படும். அதிகம் கவனம் பெறாத இத்துறையில் உள்ள கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள், இத்துறையில் சாதித்த சாதனையாளர்கள், அங்கீகாரங்கள் பற்றி விரிவாக விளக்குகிறார் இன்ஸ்பையர் ஃபெல்லோமுனைவர் உதயகுமார்.

‘‘பூமியைத் தவிர்த்துள்ள பிற கோள்களைப் பற்றி அறியும் ஆர்வமும், ஈடுபாடும் அதிகரித்து வரும் நிலையில், வான் இயற்பியல் பிரிவு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கோள்கள் தோன்றிய பின்பு அவற்றில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்பது போன்ற நுணுக்கமான பல கேள்விகளுக்கு விடையளிக்க வான் இயற்பியல் துறையையே நாட வேண்டியிருக்கிறது. நாம் வாழும் பூமி பற்றிய ரகசியங்களே இன்னும் ஏராளம் இருக்கின்றன. அதனால் வான் இயற்பியல் துறையின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. எனவே இத்துறையை மாணவர்கள் முக்கியத்துவம் தந்து தேர்வு செய்யலாம்.
வான் இயற்பியல் துறை

சார்ந்த படிப்புகள்/ பிரிவுகள்

சோலார் ஆஸ்ட்ரோபிசிக்ஸ்
Solar Astrophysics    
ஸ்டெல்லார் ஆஸ்ட்ரோபிசிக்ஸ்
Stellar Astrophysics    
ப்ளானெட்டரி ஆஸ்ட்ரோபிசிக்ஸ்
Planetary Astrophysics
காலக்டிக் ஆஸ்ட்ரோபிசிக்ஸ்
Galactic Astrophysics    
எக்ஸ்ட்ரா காலக்டிக் ஆஸ்ட்ரோபிசிக்ஸ்
Extragalactic Astrophysics
காஸ்மாலஜி
Cosmology
ஸ்பேஸ் சயின்ஸ்
Space Science
ஆஸ்ட்ரோ ஜியாலஜி
Astro Geology
ஆஸ்ட்ரோ கெமிஸ்ட்ரி
Astro Chemistry
ஆஸ்ட்ரோ மீட்டியோராலஜி.
Astro Meteorology

இந்தப் பிரிவுகளில் B.Sc., M.Sc., B.S., M.S., B.Tech., M.Tech., Ph.D., D.Phil., D.Sc. போன்ற படிப்புகள் உள்ளன. தமிழகத்தில் ஒருசில கல்லூரிகளில் மட்டுமே இளங்கலை படிப்பு உள்ளது. முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் பல பல்கலைக்கழகங்களில் உண்டு.  சிறந்த வான் இயற்பியல் துறையைக்  கொண்ட இந்திய கல்வி
நிறுவனங்கள் சில...இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆஸ்ட்ரோபிசிக்ஸ், பெங்களூருஆந்திரா யுனிவர்சிட்டி, விசாகப்பட்டினம் எம்.பி.பிர்லா பிளானடேரியம், கொல்கத்தா
ஜே.என்.டி.யு. காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங், ஐதராபாத் நேஷனல் சென்டர் ஃபார் ரேடியோ ஆஸ்ட்ரோபிசிக்ஸ், புனே மற்றும் பெங்களூரு உஸ்மானியா பல்கலைக்கழகம், ஐதராபாத் பஞ்சாபி யுனிவர்சிட்டி, பாட்டியாலா புனே யுனிவர்சிட்டி, புனே பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்டு சயின்சஸ், பிலானி இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு வான் இயற்பியல் துறையைக்  கொண்ட உலக அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்கள் சில...

யுனிவர்சிட்டி ஆஃப் கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து
     (www.cam.ac.uk)
ஹார்வர்டு யுனிவர்சிட்டி, அமெரிக்கா
    (www.harvard.edu)
யுனிவர்சிட்டி ஆஃப் ஆக்ஸ்போர்டு,
    இங்கிலாந்து (www.ox.ac.uk)
யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா,
    அமெரிக்கா  (www.universityofcalifornia.edu)
ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டி, அமெரிக்கா
    (www.stanford.edu)
கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, அமெரிக்கா (www.caltech.edu)
இம்பீரியல் காலேஜ், லண்டன், இங்கிலாந்து
     (www.imperial.ac.uk)
பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி, அமெரிக்கா
    (www.princeton.edu)
தி யுனிவர்சிட்டி ஆஃப் டோக்கியோ, ஜப்பான்
     ( www.utokyoac.jp)
தி யுனிவர்சிட்டி ஆஃப் மெல்போர்ன், ஆஸ்திரேலியா (http://www.unimelb.edu.au/)

வான் இயற்பியல் துறை  பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் சில...டிபார்ட்மென்ட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, புதுடெல்லி
கவுன்சில் ஃபார் சயின்டிபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச், புதுடெல்லி மினிஸ்டரி ஆஃப் எர்த் சயின்ஸ், புதுடெல்லி இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரோ
பிசிக்ஸ், பெங்களூரு. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், புதுடெல்லி இண்டியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன், பெங்களூரு நாசா விண்வெளி ஆய்வு மையம்,
அமெரிக்கா மாநில அரசுப்பணியாளர்  தேர்வாணையங்கள் வான் இயற்பியல் துறையைக் கொண்ட கல்வி நிறுவனங்கள் வான் இயற்பியல் துறை சார்ந்த ஆய்வு மையங்கள்
வான் இயற்பியல்  துறையில் சாதித்த இந்திய  சாதனையாளர்கள் சிலர்  

பேராசிரியர் சிராஜ் ஹாசன்
பேராசிரியர் சுப்ரமணியன் சந்திரசேகர்
பேராசிரியர் சந்தா ஜோக்
பேராசிரியர் அர்னாப் ராய் சவுத்ரி
பேராசிரியர் பானிப்ரதா முகோபாத்யாய்
பேராசிரியர் தருண் தீப் செய்னி
பேராசிரியர் ப்ரதீக் சர்மா
பேராசிரியர் பி.சி.அகர்வால்
பேராசிரியர் பி.ஸ்ரீகுமார்
பேராசிரியர் ஜெயந்த் மூர்த்தி


உலக அளவில் வான் இயற்பியல்  துறையில் சாதித்த  சாதனையாளர்கள் சிலர்

பேராசிரியர் நீல் டைசன்
பேராசிரியர் அலெக்சி ஃபிலிப்பென்கோ
பேராசிரியர் அர்னால்டு கோல்ஸட்டர்
பேராசிரியர் பிரியன் பெக்மென்
பேராசிரியர் பிரியன் மேய்
பேராசிரியர் சார்லஸ் க்ரிலி அப்போட்
பேராசிரியர் கர்ட் மைக்கேல்
பேராசிரியர் டேவிட் எல்.லாம்பெர்ட்
பேராசிரியர் டேவிட் ஸ்பெர்கெல்
பேராசிரியர் சி.பேக்கர்

வான் இயற்பியல் துறை சார்ந்த  ஆய்வுகளை ஊக்குவிக்கவும்,  ஆய்வாளர்களுக்கு அங்கீகாரம்  பெற்றுத்தரவும் உருவாக்கப்பட்டுள்ள  அமைப்புகள் / குழுக்கள்...
அமெரிக்கன் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி, அமெரிக்கா அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் வேரியபிள் ஸ்டார் அப்சர்வர்ஸ், அமெரிக்கா ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி,  இங்கிலாந்து இன்டர்நேஷனல் அஸ்ட்ரானமிக்கல் யூனியன், அமெரிக்கா தி அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி ஆஃப் ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா
அமெரிக்கன் பிசிக்கல் சொசைட்டி, அமெரிக்கா அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா, பெங்களூரு யூரோப்பியன் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி, ஜெர்மனி
மாக்ஸ் ப்ளான்க் சொசைட்டி, டென்மார்க் தி அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி ஆஃப்  விக்டோரியா, ஆஸ்திரேலியா

வான் இயற்பியல் துறையில்  சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும்  பரிசுகள்/ விருதுகள்/ பதக்கங்கள்

தி கோல்டு மெடல்
தி எடிங்டான் மெடல்
தி ஹெர்ஸெல் மெடல்
தி ஜாக்சன் - க்விஸ்ட் மெடல்
தி பேட்ரிக் மூர் மெடல்
தி ஃபல்லர் அவார்டு
தி விண்டான் கேபிட்டல் அவார்டு
தி க்ரூப் அவார்டு
தி சர்வீஸ் அவார்டு
தி சாப்மென் மெடல்
இந்த 10 விருதுகளையும் வழங்குவது தி ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி, இங்கிலாந்து

அடுத்த இதழில்

திசு வளர்ப்பியல் (Tissue culture)

தொகுப்பு: வெ.நீலகண்டன்