+2 ஆங்கிலம் இரண்டாம் தாள் சென்டம் வாங்க டிப்ஸ்



+2ஆங்கிலம் முதல் தாளில் முழு மதிப்பெண் பெறும் வழிமுறைகளை கடந்த இதழ்களில் பார்த்தோம். இனி ஆங்கிலம் இரண்டாம் தாள். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேப்பரில் முழு மதிப்பெண் பெறும் வழிமுறைகளை விரிவாக விளக்குகிறார், மேல்மலையனூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆங்கில ஆசிரியர் ணி.இளங்கோவன்.
‘‘80 மதிப்பெண்களை உள்ளடக்கியது ஆங்கிலம் இரண்டாம் தாள். இதைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 39 வினாக்கள் section A, B, C, D ஆகிய நான்கு பிரிவுகளில் கொடுக்கப்படும். இனி ஒவ்வொரு பிரிவில் கேட்கப்படும் வினாக்களின் வகைகளையும் அதற்கு எவ்வாறு பதில் அளிக்கலாம் என்பதையும் பார்ப்போம்.

section கில் 25 மதிப்பெண்களை உள்ளடக்கிய வினாக்கள் கேட்கப்படுகின்றன. இவ்வினாக்கள் எல்லாம் ‘SUPPLEMENTARY READER‘ பகுதியில் இருந்தே கேட்கப்படுகிறது. மொத்தமுள்ள ஏழு கதைகளை மாணவர்கள் முழுவதும் தெரிந்து கொண்டாலே அனைத்து வினாக்களுக்கும் பதில் அளித்து விடலாம்.

 section ‘கி‘-யில் உள்ள முதல் கேள்வி,  ‘Rearranging the sentences'.   இதில் மொத்தம் 6   sentences   இடம் பெற்றிருக்கும். இதில் முதல் மற்றும் கடைசி   sentence ஐ தவிர்த்து மற்ற நான்கு வாக்கியங்களும் இடம் மாறியிருக்கும். இந்த sentenceä சரியான வரிசையில் (correct sequence) எழுத வேண்டும். இதற்கு 5 மதிப்பெண்கள்.

ழூ 2 முதல் 6 வரையிலான கேள்விகள் multiple choice type -ல் கேட்கப்படும். Supplementary Reader-ல் உள்ள அனைத்து கதைகளையும் தெரிந்து கொண்டாலே இதற்கு விடையளித்து விடலாம்.  7 முதல் 11 வரையுள்ள கேள்விகளுக்கு, கொடுக்கப்பட்டுள்ள passageல் இருந்து சரியான விடையை எடுத்து எழுதி விடலாம். வினாவிற்கு 1 மதிப்பெண் வீதம் 5 மதிப்பெண் வழங்கப்படும்.

12-வது கேள்விக்கு இரண்டு Hints கொடுக்கப்பட்டிருக்கும். கொடுக்கப்பட்டுள்ள இரண்டு Hintsக்கு ஏதாவது ஒன்றிற்கு Essay type -ல் பதில் எழுத வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த வினாவிற்கு Supplementary Reader-ல் உள்ள இரண்டு கதைகளின் ணிssணீஹ் -வை படித்தாலே போதும். விடையளித்து விடலாம்.

அடுத்து செக்ஷன் . 13  முதல் 17 வரை 5 கேள்விகள் கேட்கப்படும். இந்தப் பிரிவில் கேட்கப்படும் மிக முக்கியமான வினாக்கள் சில. 1. Opac, 2. Different sections in a modern Library, Travelogue, Euphemism, Eponymous words, skimming and scanning, Email  id for an organisation etc.   Question Bankல் உள்ள வினாக்களைப் படித்தாலே போதும். அனைத்து கேள்விகளுக்கும் விடை எழுதி விடலாம்.

18 முதல் 22 வரையுள்ள 5 ஒரு மதிப்பெண் வினாக்கள் ‘Spot the Errors‘. இதில் ‘If clause‘ (அதிலும் குறிப்பாக 3-வது type), use of singular, plural, articles, preposition, simple, compound, complex, Agreement with the verb, concord போன்ற Grammar பகுதியில் இருந்து கேட்கப்படும். இதற்கும் கடந்த பொதுத் தேர்வுகளின் வினா வங்கியை ஷ்ஷீக்ஷீளீஷீut செய்தாலே போதுமானது. ஏனெனில் இந்தப் பகுதியில் தொடர்ந்து Repeated questions  கேட்கப்படுகின்றன.

அடுத்து section  நீ இல் (Occupational competency Job skills) உள்ள 23-வது கேள்வி ‘Summary writing‘, ஐந்து மதிப்பெண் வினா. Rough copy, Fair copy,  Suitable title கொடுத்து எழுதினால் எளிமையாக 5 மதிப்பெண்களைப் பெற்று விடலாம். (Rough copy and Fair copy  3 mark.  Suitable title 1 mark, Style and organisation 1 mark)
 
4-வது கேள்வி ‘Respond to the Advertisement.  இது 10 மதிப்பெண் வினா. கொடுக்கப்பட்டுள்ள Advertisement-ல் கேட்கப்படும் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். சரியான பதிலுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படும். (From, to 1 mark, salutation  1 mark, subject 1 mark, Ref 1 mark, Body of the  lettrers 1 mark, Bio  Data
3 mark, Place - date1 mark, Address on the envelope 1 mark).

25-வது கேள்வி (Section ‘D‘ IV ‘A‘) NonLexical fillers.  2 மதிப்பெண் வினா. இதற்கு Hmm, Er, uh, oh  போன்ற Nonlexical fillers ஐ பயன்படுத்தி விடையளிக்க வேண்டும்.

26-வது கேள்வி ‘‘Road map Instruction‘.  கொடுக்கப்பட்டுள்ள Road Map ஐ வைத்து மூன்று Instruction கொடுக்க வேண்டும். (Ex: Go Straight, Thru right and proceed, etc). 1க்கு ஒரு மதிப்பெண் வீதம் 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

27 முதல் 31 வரை (section ‘E‘ V A)  Match the following type Question. ‘Proverb Meaning‘.  கொடுக்கப்பட்டுள்ள ஐந்து  Proverb-க்கு பொருத்தமான Meaning  ஐ தேர்வு செய்து எழுத வேண்டும். கேள்வி ஒன்றுக்கு ஒரு மதிப்பெண் வீதம் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.   

இதனைத் தொடர்ந்து கேட்கப்படும் 32 முதல் 36 வரையிலான 5 கேள்விகளும் Matching  type -ல் கேட்கப்படும். கொடுக்கப்பட்டுள்ள ‘product‘க்கு சரியான ‘slogan‘ -ஐ தேர்வு செய்து எழுத வேண்டும். சரியான விடைக்கு 1 மதிப்பெண் வீதம் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதற்கும் கடந்த 5 வருட பொதுத்தேர்வு  வினா வங்கியை refer செய்தாலே போதும். எளிதாக விடையளித்து விடலாம்.

இறுதியாக 37 முதல் 39 வரையுள்ள மூன்று General Essayக்களில் ஏதேனும் ஒன்றுக்கு பதில் எழுத வேண்டும். இது 10 மதிப்பெண் வினா. இந்த வினாவிற்கு Rain water Harvesting, ‘My ambition in life‘, environmental pollution, science: ‘A boon or curse‘, The Leader I like the most  «ð£¡ø General essay வை தயார் செய்தால் கண்டிப்பாக விடையளித்து விடலாம். உழைக்கத் தயங்காதீர்கள். கவனம் சிதறாதீர்கள். திட்டமிட்டு படித்தால் நிச்சயம் ஆங்கிலம் வசப்படும். சென்டம் உங்கள் கரங்களில் வந்து நிற்கும்.

    (இளங்கோவன் தந்திருக்கும்  வினாத் தொகுப்பு: பக்கம் 16)