திசு வளர்ப்பியல் படிப்புக்கு திசையெங்கும் வேலை



தாவரங்கள் உள்ளிட்ட உயிரினங்களிலிருந்து திசுக்கள் மற்றும் செல்களைப் பிரித்தெடுத்து அவற்றை புதிய உயிரினங்களாகவும், திசுக்களாகவும், உறுப்புகளாகவும் வளர்த்தெடுக்கும் அறிவியல் பிரிவே திசு வளர்ப்பியல் (Tissue culture). இத்துறையில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், இத்துறையைக் கொண்ட கல்வி நிறுவனங்கள், இத்துறையில் சாதித்த சாதனையாளர்கள், அங்கீகாரங்கள் பற்றி விரிவாக விளக்குகிறார் ‘இன்ஸ்பையர் ஃபெல்லோ’ முனைவர் உதயகுமார்.

‘‘திசு வளர்ப்பியல் துறை உயிரியல் பிரிவின் மிகச்சிறந்த, பயன்தரும் துறைகளுள் ஒன்று. பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் திசு வளர்ப்பியல் துறை மிகவும் பயனளிக்கிறது. இத்துறை மூலம் அரிய வகை தாவரங்களை அதிகளவில் உற்பத்தி செய்ய இயலும். மேலும் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்குத் தேவையான செல்கள் மற்றும் திசுக்களையும் வளர்த்தெடுத்து பயன்மிக்கதாக மாற்றவும் இத்துறை உதவுகிறது. மனித குலத்துக்கு மாபெரும் சேவையாற்றும் வகையில் செயற்கை உறுப்புகளைத் தயாரிக்கவும் இத்துறை உதவப் போகிறது. செல் பிரிதல், வளர்ச்சி, கரு உருவாக்கம், நோய் மற்றும் இறப்பு ஆகியவை எதனால் ஏற்படுகின்றன என்பதற்கான விடையையும் இத்துறையே கண்டுபிடித்துத் தருகிறது.

பொருளாதாரப் பலன்களைத் தரக்கூடிய பண்புகளை ஒரு தாவரத்தினுள் புகுத்துவதற்கும், அதை நிலைபெறச் செய்து எண்ணிக்கையில் பெருக்குவதற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது இந்தத் துறை. இப்படி திசு வளர்ப்பியலின் முக்கியத்துவத்தை அடுக்கிக்கொண்டே போகலாம். செல்களை ஆய்வு செய்ததன் மூலம் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்டோர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இத்தகு சிறப்புமிக்க துறையை மாணவர்கள் தாராளமாகத் தேர்வு செய்து, நாட்டுக்கு சேவை செய்வதோடு சுய வாழ்க்கையிலும் வளம் பெறலாம்.

திசு வளர்ப்பியல் துறை சார்ந்த படிப்புகள்/ பிரிவுகள

Plant Tissue  culture - தாவரத் திசு வளர்ப்பு
Plant Organ culture  தாவர உறுப்பு வளர்ப்பு
Cell culture  செல் வளர்ப்பு
Animal Tissue cultureவிலங்கின திசு வளர்ப்பு
Animal Organ culture விலங்கின உறுப்பு வளர்ப்பு
Embryo culture  கரு வளர்ப்பு
Micro propagation  நுண் வளர்ப்பு
Callus culture காலஸ் வளர்ப்பு
Somatic hybridization  உடல் செல் இணைவு
Pollen culture  மகரந்த வளர்ப்பு

இப்பிரிவுகளில் Diploma, B.Sc., M.Sc., B.S.,  M.S., D.Phil., Ph.D., D.Sc. ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்திய அளவில் சிறந்த திசு வளர்ப்பியல் துறையைக் கொண்ட கல்வி நிறுவனங்கள் சில...இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோ ரிசோர்சஸ் அண்ட் சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட்,  மணிப்பூர்

இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்சஸ், புவனேஸ்வர்

நேஷனல் சென்டர் ஃபார் செல் சயின்சஸ்,
    புனே

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ப்ளான்ட் ஜீனோம் ரிசர்ச், புதுடெல்லி

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அனி மல் பயோ டெக்னாலஜி, ஐதராபாத்

ராஜீவ் காந்தி சென்டர் ஃபார் பயோ டெக்னா
    லஜி, திருவனந்தபுரம்

ரீஜினல் சென்டர் ஃபார் பயோ டெக்னாலஜி,
    ஹரியானா

 உயிரியல் துறை, சென்னைப் பல்கலைக்
    கழகம், சென்னை

 திசு வளர்ப்புப் பிரிவு, அண்ணா பல்கலைக்
    கழகம், சென்னை

திசு வளர்ப்புத் துறை, வேளாண்மை
    பல்கலைக்கழகம், கோவை

உலக அளவில் சிறந்த திசு வளர்ப்பியல் துறையைக் கொண்ட கல்வி நிறுவனங்கள் சில...

பர்ட்யூ யுனிவர்சிட்டி, அமெரிக்கா
(www.purdue.edu)

யுனிவர்சிட்டி ஆஃப் லீட்ஸ், இங்கிலாந்து (www.purdue.edu)
இம்பீரியல் காலேஜ், லண்டன்
(www3.imperial.ac.uk)
பாங்கோர் யுனிவர்சிட்டி, இங்கிலாந்து
(www.bangor.ac.uk)
யுனிவர்சிட்டி ஆஃப் நாட்டிங்காம், இங்கிலாந்து (www.nottingham.ac.uk)
மேக்கில் யுனிவர்சிட்டி, கனடா
(www.mu.edu.et)
 ஒசாகா யுனிவர்சிட்டி, ஜப்பான்
(www.osakau.ac.jp)

யுனிவர்சிட்டி ஆஃப் நியூ கேஸ்டில், ஆஸ்திரேலியா (www.newcastle.edu.au)
நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர், சிங்கப்பூர் (www.nus.edu.sg)
 அக்ரிகல்ச்சுரல் யுனிவர்சிட்டி, வசாவர், பாகிஸ்தான் (www.aup.edu.pk)  

திசு வளர்ப்பியல் துறை சார்ந்த ஆய்வுகளை ஊக்குவிக்கவும், ஆய்வாளர்களுக்கு உதவவும், அங்கீகாரம் பெற்றுத் தரவும் தொடங்கப்பட்டுள்ள குழுக்கள்/அமைப்புகள் சில...
    பங்களாதேஷ் அசோசியேஷன் ஃபார்

ப்ளான்ட் டிஸ்யூ கல்ச்சர் அண்ட் பயோ டெக்னாலஜி, வங்க தேசம் ஸ்விஸ் டிஸ்யூ கல்ச்சர் சொசைட்டி, சுவிட்சர்லாந்து ஐரோப்பியன் டிஸ்யூ கல்ச்சர் சொசைட்டி, ஜெர்மனி
அமெரிக்கன் செல் கல்ச்சர் அசோசியேஷன், அமெரிக்கா தி சொசைட்டி ஃபார் இன்விட்ரோ பயாலஜி, அமெரிக்கா யூரோப்பியன் சொசைட்டி ஃபார் அனிமல் செல் டெக்னாலஜி, ஜெர்மனி அசோசியேஷன் ஆஃப் அப்ளைடு பயாலஜிஸ்ட்ஸ், இங்கிலாந்து இன்டர்நேஷனல் ப்ளான்ட் ப்ரோப்பகேட்டர்ஸ் சொசைட்டி, அமெரிக்கா ஜப்பானீஸ் சொசைட்டி ஃபார் ப்ளான்ட் செல் அண்ட் மாலிக்குலர் பயாலஜி, ஜப்பான் இன்டர்நேஷனல் அசோசியேஷன் ஃபார் ப்ளான்ட் பயோ டெக்னாலஜி, ஜெர்மனி
திசு வளர்ப்பியல் துறையில் கவனம் பெற்ற இந்திய வல்லுனர்கள் சிலர்...

பேராசிரியர் பஞ்சன்னன் மஹேஸ்வரி
 பேராசிரியர் பி.ஜி.எல்.ஸ்வாமி
 பேராசிரியர் எஸ்.குஹா
 பேராசிரியர் சதீஷ் சி.மஹேஸ்வரி
 பேராசிரியர் சுஸ்மா கவுல்
பேராசிரியர் பி.என்.சத்யநாராயணா
 பேராசிரியர் பி.பி.கவி கிஷோர்
 பேராசிரியர் ஹெச்.சி.ஆர்யா
 பேராசிரியர் யு.ஸ்ரீனிவாசா
 பேராசிரியர் டி.பி.ஜா
திசு வளர்ப்பியல் துறையில் உலக அளவில் புகழ்பெற்ற வல்லுனர்கள் சிலர்...
 பேராசிரியர் சிட்னி ரிங்கர்
 பேராசிரியர் வில்ஹெல்ம் ரௌக்ஸ்
 பேராசிரியர் ஆர்.ஜி.ஹாரிசன்
 பேராசிரியர் நேஷனஸ் சால்க்
 பேராசிரியர் ஜான் ப்ராங்க்ளின் எண்டெர்ஸ்
 பேராசிரியர் டி.எச்.வெல்லர்
 பேராசிரியர் எப்.சி.ராபின்ஸ்
 பேராசிரியர் வி.டபிள்யூ. போர்ட்டெலா
 பேராசிரியர் ஜி.ஜாம்பெர்லாம்
 பேராசிரியர் சி.ஏ.ப்ரைஸ்

திசு வளர்ப்பியல் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள்/ விருதுகள்/ பதக்கங்கள் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் மெடல், அமெரிக்கா பங்களாதேஷ் அகாடெமி ஆஃப் சயின்சஸ் கோல்டு மெடல், பங்ளாதேஷ் ப்ரிஸ்டல் அவார்டு, அமெரிக்கா வோல்ஃப் பரிசு, இஸ்ரேல் சி.குல்பென்க்யான் ப்ரைஸ், அமெரிக்கா அமெரிக்கன் ரோடோடென்ட்ரான் சொசைட்டி  அவார்டு, அமெரிக்கா தி மெடிக்கல் ரிசர்ச் கவுன்சில் மில்லினியம்  மெடல், இங்கிலாந்து தி வேர்ல்டு ஃபுட் ப்ரைஸ், அமெரிக்கா  எஸ்.எஸ்.பட்நாகர் ப்ரைஸ், இந்தியா திசு வளர்ப்பியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் சில... மினிஸ்ட்ரி ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னா லஜி, புதுடெல்லி
மினிஸ்ட்ரி ஆஃப் அக்ரிகல்ச்சர், புதுடெல்லி யு.பி.எஸ்.சி., புதுடெல்லி மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையங்கள் திசு வளர்ப்பு துறையைக் கொண்ட கல்வி நிறு
வனங்கள் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்,  எஜுகேஷன் அண்டு ரிசர்ச் அமைப்பு டிபார்ட்மென்ட் ஆஃப் பயோ டெக்னாலஜி, புதுடெல்லி டிபார்ட்மென்ட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக் னாலஜி, புதுடெல்லி இண்டியன் கவுன்சில் ஃபார் அக்ரிகல்ச்சுரல்  ரிசர்ச், புதுடெல்லி
அக்ரிகல்ச்சுரல் சயின்டிஸ்ட் ரெக்ரூட்மென்ட்  போர்டு, புதுடெல்லி


- அடுத்த இதழில்: பூச்சியியல் (ENTOMOLOGY )

தொகுப்பு: வெ.நீலகண்டன்