தடய அறிவியல் படித்தால் தரணியெங்கும் வேலைவாய்ப்பு



குற்றங்களையும், அவற்றின் பின்னணியையும் அறிவியல் கருவிகள் மற்றும் தத்துவங்களின் துணை கொண்டு ஆராய்ந்து, முடிவு அறிவிக்கும் துறையே தடய அறிவியல் (Forensic Science). காவல், நீதி மற்றும் பல்வேறு துறைகளில் பெரும் பங்களிப்பு செய்யும் இந்தத் துறையில் உள்ள கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், இத்துறையின் முன்னோடிகள் பற்றி விரிவாக விளக்குகிறார் ‘இன்ஸ்பையர் ஃபெல்லோ’ முனைவர் உதயகுமார். 

‘‘குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களைச் சேகரித்து, அவற்றை சோதனைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக மாற்றுவது தடயவியல் வல்லுநர்களின் பணி. உலகெங்கும் குற்றச் செயல்கள் அதிகரித்துவரும் நிலையில், தடய அறிவியல் துறை நிபுணர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. சமூகத்தில் மரியாதையும் போதிய வருமானமும் தரும் இத்துறை பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடையே குறைவாகவே இருக்கிறது. குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் எவ்வகை குணநலன்களையும், பண்புகளையும் பெற்றிருப்பார்கள் என்பதை இத்துறை முழுமையாக ஆராய்கின்றது. ஒரு விபத்து அல்லது கொலை நடைபெறும்போது அது திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதா அல்லது யதேச்சையாக நடந்ததா என்பதையும் இத்துறை மூலம் கணிக்க முடியும். இத்துறை பட்டதாரிகளுக்கு உலகம் முழுவதும் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. +2வில் அறிவியல் பாடம் எடுத்துப் படித்த மாணவர்கள் இப் படிப்பை தேர்வு செய்யலாம்.

தடய அறிவியல் துறை சார்ந்த பிரிவுகள்/ படிப்புகள்

Forensic investigation  தடய ஆய்வு
Computational forensics  கணினி தடயவியல்
Criminalistics  குற்றத் தடயவியல்
Digital Forensics  எண்ணிய தடயவியல்
Forensic Accounting  தடய கணக்கீடு
Forensic Anthrapology  மானுட தடயவியல்
Forensic Archeology  தொல்லிய தடயவியல்
Forensic Astronomy  வானிய தடயவியல்
Forensic Chemistry  தடய வேதியியல்
Forensic Botany  தடய தாவரவியல்

இந்தப் பிரிவுகளில் படிக்கலாம்
B.sc., M.sc., M.phil., P.hd., D.phil., D.sc., B.S., M.S., Diploma,

தடய அறிவியல் துறையைக் கொண்ட தமிழகத்தின் சிறந்த கல்வி நிறுவனங்கள் சில...

இந்தியாவைப் பொறுத்தவரை, ஃபாரன்சிக் அறிவியல் தொடர்பான இளநிலைப் படிப்பில், ஸ்பெஷலைசேஷன் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஒருவர் சிறந்த ஃபாரன்சிக் நிபுணராக வேண்டுமெனில், அவர் முதுநிலைப் படிப்பையும் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் MA  Criminology and Criminal Justice மற்றும் MSc  Cyber  Forensics And Information Security முதுகலைப் பட்டப்படிப்புகள் உள்ளன. இதற்கு அடிப்படைத் தகுதி 10+2 மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் M.A Criminology - Police Science முதுகலைப் பட்டப்படிப்பு உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் ஓராண்டு முதுநிலைப் பட்டப்படிப்பு (PGDCPA) வழங்கப் படுகிறது. இதில் சேர்வதற்கான தகுதி, அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழக இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

சென்னை, மாதவரத்தில் உள்ள ஜே.எச்.ஏ. அகர்சன் கல்லூரியில் ரெகுலரில் இளங்கலைப் பட்டப்படிப்பு (B.A Police Administration) வழங்கப்படுகிறது. கன்னியாகுமரியில் உள்ள உதயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை (Bsc  Police Science and  Criminology)  பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.

தடய அறிவியல் துறையைக் கொண்ட இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் சில...

டெல்லியில் உள்ள குற்றவியல் மற்றும் தடயவியல் துறை நிறுவனத்தில் எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி., முதுகலைப் பட்டப்படிப்புகள் உள்ளன. உத்தரப்பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை (Master of Science (Forensic Science and Criminology), பட்டப் படிப்பு மற்றும் ஓராண்டு முதுகலை (Post Graduate Diploma in Forensic Science) பட்டயப் படிப்பும் உள்ளது. ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு (MSc Forensic Science) உள்ளது. பஞ்சாப் யுனிவர்சிட்டி, பஞ்சாப்; டாக்டர் ஹரிசிங் கவுர் யுனிவர்சிட்டி, சாகர்; சௌராஷ்ட்ரா யுனிவர்சிட்டி, குஜராத்; கர்நாடகா யுனிவர்சிட்டி, தார்வாட்; குருஷேத்ரா யுனிவர்சிட்டி, ஹரியானா; ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பீச் அண்டு ஹியரிங், மைசூர்; ஏசியன் ஸ்கூல் ஆஃப் சைபர் லாஸ், மகாராஷ்டிரா; தீனதயாள் உபத்யாயா காலேஜ், புதுடெல்லி ஆகிய கல்வி நிறுவனங்களிலும் இப்படிப்பு உண்டு.

தடய அறிவியல் துறையைக் கொண்ட உலகின் சிறந்த கல்வி நிறுவனங்கள் சில...

யுனிவர்சிட்டி ஆஃப் லாசன், சுவிட்சர்லாந்து (www.hec.unil.ch)
யுனிவர்சிட்டி ஆஃப் சாண்டியாகோ டி காம்போஸ்டெலா, ஸ்பெயின் (www.usc.es/en/index.html)
யுனிவர்சிட்டி ஆஃப் சென்ட்ரல் லங்காஷயர், இங்கிலாந்து (www.uclan.ac.uk)
லண்டன் குளோபல் யுனிவர்சிட்டி, இங்கிலாந்து (www.ucl.ac.uk)
பென்சில்வேனியா ஸ்டேட் யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.psu.edu)
யுனிவர்சிட்டி ஆஃப் கென்ட், இங்கிலாந்து (www. kent.ac.uk) யுனிவர்சிட்டி ஆஃப் லிங்கான், இங்கிலாந்து (www.lincoln.ac.uk)
கிங்ஸ்டான் யுனிவர்சிட்டி, இங்கிலாந்து (www.kingston.ac.uk)
அமெரிக்கன் இண்டர்கான்டினென்டல் யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.aiuniv.edu)
கப்லான் யுனிவர்சிட்டி அமெரிக்கா (www.kaplanuniversity.edu)

தடய அறிவியல் துறையில் சாதித்த முன்னோடிகள் சிலர்...

டாக்டர் சாவ்டா விஷால் கிஷன்பாய்
டாக்டர் கர்னவ் எஸ்.ஷா
டாக்டர் மனீஷா திவாரி
டாக்டர் மஞ்சுள் திவாரி
டாக்டர் எல்.பி.மருதாச்சலம்
டாக்டர்.ஜே.எஸ்.ஐ.ராஜ்குமார்
டாக்டர் ரூபா தலுக்தார்
டாக்டர் எல்.ஜே.பெர்னாண்டஸ்
டாக்டர் எம்.பி. கிச்சாடே
டாக்டர் எஸ்.கே.சக்கரவர்த்தி

உலக அளவில் தடய அறிவியல் துறையில் புகழ்பெற்ற வல்லுநர்கள் சிலர்...

பேராசிரியர் க்ஸி யுவான் லூ
பேராசிரியர் அம்புரோஸ் பாரே
பேராசிரியர் ஜோகன் பீட்டர் ப்ராங்க்
பேராசிரியர் கார்ல் வில்ஹெம் சீலே
பேராசிரியர் ஜேம்ஸ் மார்ஸ்
பேராசிரியர் அல்போன்ஸ் பெர்ட்டில்லான்
பேராசிரியர் வில்லியம் ஹெர்செல்
பேராசிரியர் ஹென்றி ஃபால்ட்ஸ்
பேராசிரியர் ப்ரான்சிஸ் கால்ட்டன்
பேராசிரியர் ஜீவான் ஊசெட்டிக்

உலக அளவில் தடய அறிவியல் துறை மாணவர்களை ஊக்குவிக்கவும், ஆராய்ச்சி களை அங்கீகரிக்கவும் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள் சில...

அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஃபாரன்சிக் சயின்சஸ், அமெரிக்கா
அசோசியேஷன் ஆஃப் ஃபயர் ஆர்ம் அண்ட் டூல் மார்க் எக்ஸாமினர்ஸ், அமெரிக்கா
கனடியன் ஐடென்டிபிகேஷன் சொசைட்டி, கனடா
இன்டர்நேஷனல் அசோசியேஷன் ஃபார் ஐடென்டிபிகேஷன்
சதர்ன் அசோசியேஷன் ஆஃப் ஃபாரன்சிக் சயின்டிஸ்ட்ஸ், அமெரிக்கா
தி இன்டர்நேஷனல் அசோசியேஷன் ஆஃப் லா அண்டு ஃபாரன்சிக் சயின்சஸ், அமெரிக்கா
ஃபாரன்சிக் சயின்ஸ் சொசைட்டி, இங்கிலாந்து
அமெரிக்கன் போர்டு ஆஃப் க்ரிமினலிஸ்டிக்ஸ், அமெரிக்கா
இண்டியன் ஃபாரன்சிக் ஆர்கனிசேஷன், இந்தியா

தடய அறிவியல் துறையில் சாதிக்கும் ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் / பதக்கங்கள் / விருதுகள் சில...

ஜான். ஏ.டோன்டெரோ மெமோரியல் அவார்டு, இன்டர்நேஷனல் அசோசியேஷன் ஃபார் ஐடென்டிபிகேஷன்
குட் ஆஃப் தி அசோசியேசன் அவார்டு, இன்டர்நேஷனல் அசோசியேஷன் ஃபார் ஐடென்டிபிகேஷன்
தி அடிலெய்ட் மெடல், ஆஸ்திரேலியா
காப்லி மெடல், இங்கிலாந்து
தி ஃபாரன்சிக் சயின்ஸ் சௌத் ஆஸ்திரேலியா ப்ரைஸ், ஃப்ளிண்டர்ஸ் யுனிவர்சிட்டி
ஜெரோம் மெட்ஜ்னர் அவார்டு, அமெரிக்கா
ஆர்த்தர் எஸ்.ப்ளெம்மிங் அவார்டு, நியூசிலாந்து
க்னாக்ஸ் மெடல், நெதர்லாந்து
தி ப்ரெசிடென்ட் ஒபாமா அவார்டு, அமெரிக்கா
அகாடெமிக் அச்சீவ்மென்ட் அவார்டு, இங்கிலாந்து

தடய அறிவியல் துறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் அமைப்புகள் சில...

மினிஸ்ட்ரி ஆஃப் டிபென்ஸ், மத்திய அரசு
மினிஸ்ட்ரி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, மத்திய அரசு
யு.பி.எஸ்.சி., புதுடெல்லி
மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையங்கள்
ரயில்வே அமைச்சகம், மத்திய அரசு
மினிஸ்ட்ரி ஆஃப் லா அண்டு ஜஸ்டிஸ், மத்திய அரசு
தடயவியல் துறையைக் கொண்ட கல்வி நிறுவனங்கள்.

அடுத்த இதழில் உளவியல் (Psychology )
தொகுப்பு: வெ.நீலகண்டன்