சேவை தொடரட்டும்..!



வாசகர் கடிதம்

ஐ.ஐ.எம். என்று சொல்லப்படும் இந்திய மேலாண்மை கழகத்தில் முதுநிலை நிர்வாக மேலாண்மைப் பட்டம் படிப்பதற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை முதல் பக்கத்திலேயே வெளியிட்டது சிறப்பு. மேலும் ‘ஆயுஷ் படிப்புக்கும் நீட் தேர்வா..? அலைக்கழிக்கப்படும் தமிழக மாணவர்கள்!’ என்ற டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கட்டுரை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலையைப் படம்பிடித்து காட்டியது அருமை.
  - ஏ.குமார், தாராபுரம்.
 
துணைராணுவப் படைகளில் 54,953 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள விவரத்தையும் இந்தப் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தும் ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் என்ற தேர்வு ஆணையத்தைப் பற்றிய தகவல்களும் சூப்பர். ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு உள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமாக அமைந்திருந்தது.
  - ஆர்.ரமேஷ், திருப்பத்தூர்.
 
ஒருபுறம் ஏகப்பட்ட தனியார் கம்பெனிகள் பெருகிவந்தாலும் மறுபுறம் வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. இந்த சூழ்நிலையைக் கடந்துசெல்ல ஒரேவழி சுயதொழில்தான். சுயதொழில் தொடங்க நினைக்கும் யாராக இருந்தாலும் அவரவருக்கு ஏற்ற தொழிலை தேர்ந்தெடுக்கும் வகையில் பல்வேறுபட்ட சுயதொழில்களுக்கான திட்டமதிப்பீடு, திட்ட அறிக்கை, உற்பத்தி முறை, லாபம் உள்ளிட்ட விவரமான தகவல்களை வழங்கும் கல்வி - வேலை வழிகாட்டி இதழின் சேவை தொடரட்டும்!
  - இரா.ராஜேந்திரன், காஞ்சிபுரம்
 
குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி இதழில் வரும் கேம்பஸ் நியூஸ், வேலை ரெடி!, மத்திய/மாநில அரசுகளின் நிதியுதவி மற்றும் கடன் திட்டங்கள், உடல்… மனம்… ஈகோ! என்ற உளவியல் தொடர் என பன்முகத்தன்மையோடு வரும் பகுதிகள் அருமை. கல்வி சார்ந்த A to Z தகவல்களுக்கு நன்றி!
   - எஸ்.கார்த்திகேயன், செங்கல்பட்டு.