வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

இந்திய விமான ஆணைய தீயணைப்புப் பிரிவில் வேலை

நிறுவனம்: ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப்
இந்தியா எனும் மத்திய அரசின் விமான நிலைய ஆணையத்தில் வேலை
வேலை: தீயணைப்புத் துறையில் ஜூனியர் அசிஸ்டென்ட் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 119
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு படிப்புடன் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் அல்லது ஃபையர் சர்வீசில் 3 வருட டிப்ளமோ படிப்பு. அல்லது +2 தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 30 வரை
தேர்வு முறை: எழுத்து, மருத்துவச் சோதனை, டிரைவிங் தேர்வு மற்றும் உடல் தகுதி சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.8.18
மேலதிக தகவல்களுக்கு: www.aai.aero

சஞ்சய் காந்தி மருத்துவ ஆய்வு நிறுவன வேலை

நிறுவனம்: சஞ்சய் காந்தி போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் எனும் மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் வேலை
வேலை: லோயர் டிவிஷன் கிளார்க், ஸ்டெனோ, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், லைப்ரேரியன், ஸ்டோர் கீப்பர், அசிஸ்டென்ட் அக்கவுன்டன்ட் உட்பட பல்வேறு பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 178
கல்வித் தகுதி: ஏதாவது டிகிரி, எம்.எஸ்சி., பி.காம், டிப்ளமோ படிப்பு, பி.எஸ்சி., எஞ்சினியரிங், சோஷியல் ஒர்க் உட்பட வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப படித்திருப்பவர்கள் இந்த வேலைகள் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 21 முதல் 40 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1.9.18
மேலதிக தகவல்களுக்கு: www.sgpgi.ac.in

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலை!

நிறுவனம்: டி.ஆர்.டி.ஒ. எனப்படும் மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலை
வேலை: ‘பி’ பிரிவில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: மொத்தம் 494. இதில் பொதுப்பிரிவு 260, ஓ.பி.சி 130, எஸ்.சி. 68 மற்றும் எஸ்.டி-யினருக்கு 36 இடங்கள்
கல்வித் தகுதி: எஞ்சினியரிங் டிப்ளமோ அல்லது ஏதாவது ஒரு அறிவியல் துறையில் டிகிரி
வயது வரம்பு: 18 முதல் 28 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: செப்டம் எனும் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29.8.18
மேலதிக தகவல்களுக்கு: www.drdo.gov.in

பொறியியல் பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை!

நிறுவனம்: இண்டியன் நேவி எனப்படும் இந்திய கடற்படை
வேலை: டெக்னிக்கல் மற்றும் எக்சிகியூட்டிவ் எனும் இரு பிரிவுகளில் ஷார்ட் சர்வீஸ் கமிஷன்கீழ்
அதிகாரிகள் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 118. இதில் டெக்னிக்கல் பிரிவில் 72, எக்சிகியூட்டிவ் பிரிவில் 46 இடங்கள். எக்சிகியூட்டிவ் பிரிவில் உள்ள 46 இடங்களில் 12 இடங்கள் பெண்களுக்கானது. மற்ற வேலைகளில் திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி: பி.இ. மற்றும் பி.டெக் படிப்பு
வயது வரம்பு: 19 1/2 முதல் 25 வரை
தேர்வு முறை: ஷார்ட் சர்வீஸ் கமிஷன் எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.8.18
மேலதிக தகவல்களுக்கு: www.joinindiannavy.gov.in

இந்தியன் வங்கியில் அதிகாரி பணி!

நிறுவனம்: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் வங்கி
வேலை: ப்ரொபேஷனரி ஆபீசர் எனும் அதிகாரி பணி
காலியிடங்கள்: மொத்தம் 417. இதில் பொதுப்பிரிவு 212, ஓ.பி.சி 112, எஸ்.சி 62 மற்றும் எஸ்.டி. 31 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
வயது வரம்பு: 20 முதல் 30 வரை
தேர்வு முறை: ஆன்லைனில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27.8.18
மேலதிக தகவல்களுக்கு: www.indianbank.in

மத்திய அரசின் சுகாதாரத் துறையில் ஃபார்மசிஸ்ட் பணி!

நிறுவனம்: சென்ட்ரல் கவர்மென்ட் ஹெல்த் ஸ்கீம் எனும் மத்திய அரசின் சுகாதாரத்
திட்டத்தில் வேலை
வேலை: ஃபார்மசிஸ்ட் பிரிவின்கீழ் அலோபதி உட்பட பல்வேறு மருத்துவத் துறையில் வேலையும், ஈ.சி.ஜி. எனும் லேப் டெக்னிக் பிரிவில் ஒரு வேலையும் உள்ளது
காலியிடங்கள்: மொத்தம் 125. இதில் ஃபார்மசிஸ்ட் அலோபதி துறையில் மட்டுமே 97 காலியிடங்கள் உள்ளது
கல்வித் தகுதி: ஃபார்மசிஸ்ட் வேலைகளுக்கு +2-ல் அறிவியல் பாடங்களை எடுத்து படித்து தேர்ச்சி.
வயது வரம்பு: 18 முதல் 25 வரை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27.8.18
மேலதிக தகவல்களுக்கு: www.cghs.nic.in

தொகுப்பு: டி.ரஞ்சித்