சுழலும் கேபிள் கார்



இயற்கை அழகு எல்லாம் கொட்டிக் கிடக்கும் ஓர் இடம் சுவிட்சர்லாந்து. அங்கிருக்கும் பனிமலைகளை 360 டிகிரி கோணத்தில் சுற்றிப் பார்த்தால் மட்டுமே அதனுடைய அழகை ஓரளவுக்காவது தரிசிக்க முடியும். பாதையின்மை, கடுங்குளிர் போன்றவற்றால் அது சாத்தியமே இல்லை. வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று பல வருடங்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு சுழலும் கேபிள் காரை உருவாக்கியிருக்கின்றனர்.

இந்த சுழலும் காரின் மூலம் பனிபோர்த்தியிருக்கும் டிட்லஸின் அழகை முழுவதுமாக ரசிக்க முடியும். கடல் மட்டத்திலிருந்து 3,238 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த மலைக்கே கேபிள் காரின் வழியாகத்தான் செல்ல முடியும் என்பது ஹைலைட். வருங்காலத்தில் சுவிஸ்ஸில் உள்ள அனைத்து மலைகளையும் 360 டிகிரி கோணத்தில் தரிசிக்க சுழலும் கேபிள் கார்கள் வந்துவிடும்.