மிதக்கும் விமான நிலையம்



கடலுக்குள் கப்பல் விடலாம். கடலின் மேல் விமானத்தை விட முடியுமா? முடியும் என்று சாதித்திருக்கிறது ஜப்பான். கடலுக்குள் ஒரு செயற்கையான தீவை உருவாக்கி, அதன் மேல் விமான நிலையத்தையும் அமைத்திருக்கிறது ஜப்பான். உலகிலேயே கடலின் நடுவே உருவான முதல் விமான நிலையம் இதுதான்.

ஒசாகா கடல் பகுதியில் உள்ள இதற்கு கன்சாய் என்று பெயர். இப்படியான விமான நிலையம் உருவாக தொழில்நுட்பம் ஒரு காரணமாக இருந்தாலும், ஜப்பானின் இட நெருக்கடியும் இன்னொரு முக்கிய காரணம். 1994-ம் வருடம் சுமார் 68 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உதயமான இந்த விமான நிலையத்துக்கு வருடந்தோறும் 3 கோடி பயணிகள் வந்து போகின் றனர். 2018-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஆசியாவிலேயே முப்பதாவது பிஸி விமான நிலையம் இதுதான்.