மலிவு விலையில் 5000mAh போன்மலிவு விலையில் ஸ்மார்ட்போன் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது ‘ரெட்மி’ தான். இன்று இந்தியாவின் குக் கிராமங்களில் உள்ளவர்களின் கையில் கூட ஸ்மார்ட்போன் தவழ்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணமே ‘ரெட்மி’ என்று சொன்னால் அது மிகையாகாது.
‘ஷியோமி’ நிறுவனத்தின் பிராண்டான ‘ரெட்மி’ புது வருடத்தில் முதல் மாடலை அறிமுகப்படுத் தியுள்ளது. இந்த மாடலின் பெயர் ‘ரெட்மி 8ஏ டுயல்’. கடந்த வருடம் வெளியான ‘ரெட்மி 8ஏ’ மாடலின் அப்டேட் வெர்ஷன் தான் இது. இந்த போனில் உள்ள அம்சங் களைப் பார்ப்போம்.

இவ்வளவு குறைவான விலையில் இத்தனை அம்சங்களுடன் கூடிய போனைக் கொடுக்க முடியுமா என்று அசரடிக்கிறது இந்த மாடல். 6.2 இன்ச்சில் ஹெச்.டி டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு,  2 ஜிபி மற்றும் 3 ஜிபி என இரண்டு வகையான ரேம்கள். ஆனால், இன்பில்ட் ஸ்டோரேஜ் 32 ஜிபி மட்டுமே.

வேண்டுமானால் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் ஸ்டோரேஜை 512 ஜிபி வரை நீட்டித்துக்கொள்ள முடியும். விலையுயர்ந்த போன்களில் இருக்கும் 5000mAh பேட்டரி திறன், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் இரண்டு நாட்களுக்கு சார்ஜ் நிற்கும் என்ற உத்தரவாதம்,  13 எம்பியில் முதன்மை கேமரா, 2 எம்பியில் டெப்த் கேமரா என இரண்டு பின்புற கேமராக்கள், செல்ஃபிக்குத் தனியாக 8 எம்பியில் முன்புற கேமரா என கெத்து காட்டுகிறது இந்த போன். விலை ரூ.6,499-லிருந்து ஆரம்பிக்கிறது.