உலகின் டாப் 10 குகைகள்



ஆதிமனிதனின் வாழ்விடமாக இருந்த குகைகளை நேரில் பார்க்கும்போது கொஞ்சம் பயமாகவும் நிறைய த்ரில்லாகவும் இருக்கும். சில குகைகள் மலைகளின் உச்சியிலும், சில குகைகள் ஆர்ப்பரிக்கும் அருவியின் பின்னும் இருப்பது இன்னும் பேரதிசயம். உலகை அழகாக்கும் அற்புதகுகைகளின் டாப் 10 பட்டியல் உங்களுக்காக...

Phong Nha Cave (Vietnam)

வியட்நாமின் இரண்டாவது பெரிய குகை. இது Bàng National Parkல் அமைந்துள்ளது. 7,730 மீட்டர் நீளமுள்ள இந்த குகையை ஆராய்ச்சியாளர்கள் 44.5 கிலோ மீட்டர் வரை ஆராய்ந்திருக்கிறார்கள். எனினும் பார்வையாளர்களுக்கு முதல் 1,500 மீட்டர் வரை மட்டுமே அனுமதி.

Skocjan Caves (Slovenia)

உலகின் மிக முக்கியமான குகைகளில் ஒன்றான இதில் ஏராளமான நீர்வீழ்ச்சிகள், பாலங்கள் உள்ளன. குறிப்பிடத்தக்க வித்தியாசமான சுற்றுச்சூழல் காரணமாக இது ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் உள்ளது. யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக 1986ல் அறிவிக்கப்பட்ட பெருமை கொண்டது.

Jeita Grotto (Lebanon)


இரண்டு தனித்தனியான ஆனால், ஒருங்கிணைந்த லைம் ஸ்டோன் வளைவுகளின் மூலம் அமைந்த இந்த குகை 9 கிலோ மீட்டர் நீளமுள்ளது. கீழ் குகைக்கு படகின் மூலம் மட்டுமே போக முடியும்.

Reed Flute Cave (Guilin, China)


stalactites, stalagmites என்னும் கீழிருந்து மேல் கூம்பு வடிவங்களும் மேலிருந்து தொங்கும் கூர்மையான கூம்பு போன்ற பாறைகளும் கொண்ட மிக அழகிய குகை. 18 கோடி ஆண்டு பழமையான இந்த குகை கிட்டதட்ட1,200 வருடங்களாக வெளியுலகின் பார்வைக்கு உள்ளது. 1940ல் மீண்டும் சில ஜப்பானிய நாடோடிகளால் கண்டு பிடிக்கப்பட்ட இக்குகை வண்ணமயமான அழகிய பாறை வடிவங்களை கொண்டது.

Carlsbad Caverns  (New Mexico,United States)

Carlsbad Caverns National Parkல் அமைந்துள்ள உலகின் 7வது பெரிய குகையான இது, ஏகப்பட்ட அழகிய, அதிசய பாறை வடிவங்களால் ஆனது.

Mammoth  Cave (Kentucky,United States)


உலகின் மிக நீளமான குகையான இது, 630 கிலோ மீட்டர் நீளமுள்ளது. அமெரிக்காவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று.

Bystrianska Cave (Slovakia)

1926ல் அறியப்பட்ட இந்த குகை 2,637 மீட்டர் நீளமுள்ளது. 1968 முதல் 490 மீட்டர் வரை சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்து விடப்
படுகிறது.

Važecká Cave (Slovakia)

530 மீட்டர் நீளமுள்ள இந்த குகையில் 230 மீட்டர் மட்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி. 1922ல் கண்டறியப்பட்டது. உலகின் சிறிய குகைகளில் இது குறிப்பிடத்தக்கது.

Waitomo Glowworm Caves (NewZealand)

ஒருவகையான மின்னும் தன்மையுள்ள பட்டுப்பூச்சிகளின் கூடுகள் மேலிருந்து கீழாகத் தொங்குவதும் இரவில் நீல நிறமாக மின்னுவதும் இந்த குகையின் சிறப்பு. பூச்சியின் பெயரே இந்த குகைக்கும் இருப்பதிலிருந்தே அதன் பெருமையை அறியலாம்.

Cave  Of  Crystals (Mexico)


ஒரு வகை க்ரிஸ்டலினால் ஆன இந்த குகை, 2000ல் ஒரு சுரங்கத் தொழிற்சாலையினால் கண்டுபிடிக்கப்பட்டது. தரைமட்டத்திலிருந்து 300 மீட்டர் கீழ் அமைந்துள்ள இந்த குகையில் பொதுவாகவே 50 டிகிரி வெப்பம் உணரப்படுவதால் பார்வையாளர்கள் அதிகபட்சம் 10 நிமிடம் மட்டுமே உள்ளிருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.