வார்த்தை ஜாலம்



ஈ அடிச்சான் காப்பி!

Jump on the bandwagon

‘இதுதான் இப்போ ஃபேஷன். எல்லோரும் leggings போடறாங்க... அதான் நானும் போட்ருக்கேன்’னு நீங்க சொன்னா then Î have Jumped on  the bandwagon! அதாங்க... புதுசா வந்திருக்கிற ஒரு பிரபலமான பழக்கம் (activity) / காலப்போக்கை (trend) நீங்களும் பின்பற்றி, உங்க  பழக்கத்தையும் மாத்திக்கிறதுக்குப் பேருதான் Jump / hop on the bandwagon.

Bandwagonù£ சர்க்கஸ் பாண்டு வாத்தியக்காரர்களை ஏற்றிச் செல்லும் அலங்கரிக்கப்பட்ட வண்டி. அமெரிக்காவில் வாழ்ந்த Barnam என்ற  பிரபல சர்க்கஸ் முதலாளி, தேர்தலின் போது கட்சி பிரசாரத்துக்காக இந்த bandwagonä பயன்படுத்தியபோது, மக்கள் அதனால் மிகவும்  கவரப்பட்டனராம். அவரைப் பார்த்து ஈ அடிச்சான் காப்பியாக மற்ற கட்சியினரும் இந்த bandwagonனை உபயோகித்தனர். அதன்பின் இப்படி  குருட்டுத்தனமாக பிரபல்யம் ஆவதற்கு ஒருவர் செய்ததை இன்னொருவரும் செய்தால், அதை Jump on the bandwagon என்று சொல்ல  ஆரம்பித்தனர்.

இன்றோ, இந்தச் சொற்றொடர் கொஞ்சம் மெருகேறி பிரபலமாக இருக்கும் ஒரு நல்ல விஷயத்தை ஆதரிப்பதையோ, பின்பற்றுவதையோ குறிக்கும் மரபு  சொற்றொடராக மாறிப்போனது.   ‘Now you must Jump on the bandwagon to quit smoking’ னு சொன்னா புகைப்பழக்கத்தை  எதிர்க்கும் விழிப்புணர்வு பிரசாரத்தில் நீங்களும் சேர வேண்டும்னு அர்த்தம்!

இன்னொரு நாள்!Rain check

பேரில்தான் மழை இருக்கே தவிர இந்த மரபுச் சொற்றொடரின் பொருள் கொஞ்சம் வித்தியாசமானது. எங்காவது ஒரு பொது இடத்துக்கு போறீங்க... அங்கே  உங்களுக்கு தெரிஞ்ச ஒரு நண்பரை சந்திக்கிறீங்கன்னு வெச்சுக்குவோம். ‘என் வீடு பக்கத்திலதான் இருக்கு வாங்க’ன்னு கூப்பிடறார். ‘இல்லை... வேற ஒரு  வேலை இருக்கு’ன்னு சொல்லி தப்பிக்க பார்க்கும் நீங்க, ‘இன்னொரு நாள் வர்றேன்’னு அழைப்பை தட்டிக் கழிக்க முயலுவீங்கதானே?

இப்படி ஒரு அழைப்பையோ அல்லது சலுகையையோ நீங்க இப்போது வேண்டாம் என்று மறுத்தாலும், பின்னாளில் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருப்பதைக்  குறிக்கும் சொல்தான் இந்த Rain check. இந்த வார்த்தை பேஸ்பால் போட்டியைக் காணச் செல்லும் மக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகையினால் உருவானதாம். போட்டியின் போது மழையினால் ஆட்டம்  தடைபட்டால் காசு கொடுத்து டிக்கெட் வாங்கினவன் சண்டைக்கு வரமாட்டானா? அதனால்தான் அதை ஈடு செய்யும் விதமாக அதே டிக்கெட்டை வைச்சு வேறு  ஒரு நாள் பேஸ்பால் போட்டியைப் பார்த்துக்கலாம்னு சலுகை குடுப்பாங்களாம். மழையினால் ஏற்பட்ட இந்த சமாதான உடன்படிக்கைக்கு Rain  checkன்னு பொதுப்பெயர் வெச்சாங்களாம்.

பின்னாளில் இந்த வார்த்தை ஒரு அழைப்பை தாமதப்படுத்துவதற்கும், out of stockகாக இருக்கும் ஒரு பொருளை உடன்படிக்கையின் பெயரில் வணிகர்கள்  தாமதமாக வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதையும் குறிக்கும் சொல்லாக உருமாறியது. இனி நீங்கள் ஒரு அழைப்பை ஏற்கும் முன் சிந்தித்து, ‘Can I take a rain check?’ அல்லது ‘I’ll have to take a rain  check’ அல்லது கொஞ்சம் மாற்றி, ‘I’ll take a rain check on that’னு சொல்லிப் பார்ப்பீங்கதானே!