3 விமர்சனம்





சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்   தால், எந்தளவுக்கு மனநோய் விபரீதமாகி பலரது வாழ்க்கையை அழிக்கும் என்பதை பதிவு செய்ய முயன்றிருக்கிறார்கள். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா, முதல் முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். பல காட்சிகள் சபாஷ் போட வைக்கின்றன. ஆனால், திரைக்கதைதான் காலை வாரி விட்டது. முதல் பாதிக்கும், இரண்டாம் பாதிக்கும் தொடர்பில்லாமல் போனதால், ஒரே டிக்கெட்டில் இரு படங்களை பார்க்கும் உணர்வு. பள்ளி மாணவன், கல்லூரி செல்லும் இளைஞன், கணவன் என மூன்று பருவங்களை தன் உடல் மொழியிலும், முக பாவனைகளிலும் கொண்டு வந்திருக்கிறார் தனுஷ். தேர்ந்த நடிகர் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. ஸ்ருதிஹாசன் முதல் பாதியில் மனதை அள்ளுகிறார். பாடல்களில் மட்டுமல்ல, பின்னணியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் அனிருத்.