கொஞ்சம் மேசேஜ் நிறைய க்ளாமர்





“பல பெண்களின் வாழ்க்கையை நாயகன் சீரழிக்கிறான். அவனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், தனக்கு நியாயம் கிடைக்க போராடுகிறாள். இதுதான் யுனைட்டெட் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் நாவரசன், தேவராஜ் தயாரிக்கும் ‘சோக்காலி’ படத்தின் கதை. நாயகனாக சைதன்யாவும், நாயகனால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவராக சுவாசிகாவும் நடிக்கிறார்கள். காஞ்சனா என்ற தொழில் அதிபராக வரும் சோனா, கவர்ச்சியை மட்டுமல்ல, நடிப்பையும் வாரி வழங்கியிருக்கிறார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் நா.முத்துக்குமார் மற்றும் தயாரிப்பாளர் நாவரசன் எழுதியுள்ள பாடல்கள் தெவிட்டாத இன்பத்தை வழங்கும்...’’ என்று சொல்லும் இயக்குநர் சரணா, ‘சோக்கு மச்சான் சோக்கு...’ என்ற பாடலையும் எழுதியிருக்கிறார்.
- எஸ்