மிதிவெடி கண்ணிவெடி உலகவெடி





“கண்ணிவெடிகளால் இன்று உலகமே பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உலகளவில் கண்ணிவெடி களை பற்றிய திரைப்படங்கள் குறைவாகவே வந்துள்ளன. சொல்லப் போனால் கடந்த நூறு ஆண்டுகளில் முப்பது படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. இந்தக் குறையை போக்கவும், கண்ணி வெடி குறித்த     அழுத்தமான பதிவையும் சொல்லும் விதமாக மிஸ்டிக் பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘மிதி வெடி’ படத்தை இயக்கியிருக்கிறேன்.

இலங்கை இராணுவ அதிகாரியாக டேனியல் பாலாஜியும், ஈழப்பெண்ணாக நீலிமாவும் இப் படத்தில் நடித்திருக்கிறார்கள். கண்ணி வெடி யால் பாதிக்கப்பட்ட விவசாயியாக ‘ஈழம்’ கைலாசம் வாழ்ந்திருக்கிறார். யாழ பாரதி நெடுஞ்செழியன் பாடல்களுக்கு அருணகிரி இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லருக்கு இணையதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நிச்சயம் படத்துக்கும் இதே வரவேற்பு கிடைக்கும்...’’ என்கிறார் இயக்குநர் ஆனந்த மயூர் ஸ்ரீநிவாஸ்.
- எஸ்