நடிகை தயாரிக்கும் க்ளாமர் வீடியோ





பாலிவுட்டில் அமீஷா படேல் தனது 2வது இன்னிங்சை தொடங்கியுள்ளார். இதனால் விதவிதமாக க்ளாமர் போட்டோ ஷூட் நடத்தி உலவ விட்டிருக்கிறார். விரைவில் சினேகா உல்லால் பாணியில் படு க்ளாமர் வீடியோவும் வெளியிட உள்ளாராம்.

நைட் பார்ட்டி பறவையான மலாய்க்கா அரோரா, அந்த பழக்கத்தை விட முடியாமல் தவிக்கிறாராம். இது தொடர்பாக பலமுறை தனது கணவர் அர்பாஸ் கானுடன் சண்டை போட்டிருப்பதாகவும் கூறுகிறார்.

கிரிஷ் படத்தை தொடர்ந்து ‘கிரிஷ் 3’லும் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இதில் ஹிருத்திக்குடன் நடித்தாலும் அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம். படம் வெளியாகும் வரை பிரியங்காவின் கேரக்டர் சஸ்பென்ஸாக இருக்குமாம்.

ன்ஸ் அபான் ஏ டைம் இன் மும்பை’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. ‘டர்ட்டி பிக்சர்’ மிலன் லுதாரியா இயக்குகிறார். இப்படம் தாவூத் இப்ராகிமின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படுவதால் மந்தாகனி வேடம் படத்தில் இடம்பெறுகிறது. இதில் சோனாக்ஷி சின்ஹா  நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார்.
- ஜியா