மீராவுடன் கிருஷ்ணா விமர்சனம்





மனைவியை சந்தேகப்படும் கணவனின் கதை. சந்தேக கணவனாக இயக்குநர் கிருஷ்ணாவே நடித்திருக்கிறார். அழகான மனைவி வேடத்தில் கச்சிதமாக பொருந்தும் ஸ்வேதா, கோபம், தாபம் என்று நடிக்கவும் செய்துள்ளார். டீச்சராக வரும் எம்.ஆர்.ஏ.விஜய் எபிசோட் கொஞ்சம் நேரம் என்றாலும் டச்சிங் பாயிண்ட். செந்தில் பிரசாத் இசையில் பாடல்கள் ஓகே. யாரிடமும், தான் உதவியாளராக பணிபுரிந்ததில்லை என இயக்குநர் முன்பு பேட்டியில் சொல்லியிருந்தார். அது, படத்தை பார்க்கும்போது தெரிகிறது.


ஒத்தவீடு விமர்சனம்



மாமா என்று தன்னால் அழைக்கப்படும் ஒருவரே தன்னை அடைய முயலும்போது அப்பெண் நிலைகுலைகிறாள். இதை அறியாமல் தன் பெண்ணுக்கு பேய் பிடித்துவிட்டதாக அவள் அம்மா நினைக்கிறாள். அம்மாவின் செயலால் அப்பெண் உயிரை விடுகிறாள். இதனையடுத்து கதையில் ஏராளமான முடிச்சுகள். இறுதியில் அவற்றை அவிழ்க்கிறார்கள். எம்.எஸ். பாஸ்கர், வடிவுக்கரசி இருவரும் கேரக்டருக்கு பெருமை சேர்க்கிறார்கள். அறிமுக இயக்குநர் பாலு மலர்வண்ணன், மூட நம்பிக்கைகளை எதிர்த்து மெசேஜ் சொல்ல நினைத்திருக்கிறார்.