வாங்க சிரிக்கலாம்





இயக்குநர் எழிலுக்கு அறிமுகம் தேவையில்லை. மனதை வருடம் காதல், உறவின் மேன்மையை சொல்லும் சினிமா என வெரைட்டியாக முத்திரை பதித்திருக்கும் வித்தைக்காரர். ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பெண்ணின் மனதைத் தொட்டு’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘தீபாவளி’... என இவரது அடையாளங்கள் பல. இப்போது ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தன்னுடைய நண்பர்கள் அம்பேத்குமார், ரஞ்சீவ் மேனனுடன் இணைந்து ‘மனம் கொத்திப் பறவை’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார்.

‘‘காதலும் காமெடியும் கலந்த கதை இது. சிவகார்த்தி கேயன் முழு நீள ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடி, ஆத்மியா. இளவரசு, வெண்ணிற ஆடை மூர்த்தி, சூரி, ரவிமரியா, ‘தெய்வதிருமகள்’ கிஷோர், சிங்கம்புலி, ஸ்ரீநாத், சாம்ஸ் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் உண்டு. சுருக்கமாக சொல்வதென்றால், இந்தப் படம் பொழுதுபோக்கின் உச்சமாக இருக்கும்...’’ என்கிறார் எழில்.- சுரேஷ்ராஜா