ஸ்ரேயாவின் சின்னவயது ஆட்டம்!



அம்மா நீரஜா சரணிடம் சின்னவயதிலேயே கதக் மற்றும் ராஜஸ்தானி நடனம் கற்றவர் ஸ்ரேயா. கல்லூரியில் படிக்கும்போது, நாட்டு நடப்பை பிரதிபலிக்கும் நடனம் வடிவமைத்து ஆடி, பாராட்டுப் பெற்றுள்ளாராம்.

விமல் ஜோடியாக ‘இஷ்டம்’ படத்தில் நடித்த காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால், டிசம்பரில் திருமணம் செய்துகொண்டார். குடும்ப வாழ்க்கை போரடித்து விட்டதோ என்னவோ, தற்போது அவர் ஒரு மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.

“ஷாரூக் கானுடன் நடித்த ஒரு விளம்பரப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான், ‘சிலம்பாட்டம்’ படத்துக்கு என்னை தேர்ந்தெடுத்தார் சிலம்பரசன். அந்த விளம்பரத்துக்குத்தான் நன்றி சொல்லணும்’’ என்கிறார் சனா கான்விரைவில் பாலிவுட் செல்கிறார் லாரன்ஸ்.

தமிழில் ‘முனி’யின் 3ம் பாகத்தை ‘கங்கா’ என்ற பெயரில் இயக்கி நடித்து வரும் அவர், தமிழில் அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ‘காஞ்சனா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்குகிறார். இதில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார்.