ரூட் மாறும் அனுஷ்கா!



சரித்திரப் படங்களில் நடிக்கும் திறமை அனுஷ்காவுக்கு இருப்பதை அறிந்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரை அப்படிப்பட்ட படங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ படங்களின் போஸ்டர்களில் அனுஷ்காவின் தோற்றம் முதிர்ச்சியாகத் தெரிவதாக படவுலகில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து, இனி கமர்சியல் படங்களில் மட்டுமே நடிப்பதாக அனுஷ்கா முடிவெடுத்துள்ளார்.

படத்துக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆகாது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் காஜல் அகர்வால். ‘நல்ல படம், வந்து பாருங்க’ என்று நான் ரெகமெண்ட் செய்தாலும், படம் நன்றாக இருந்தால்தான் ஓடும். ரசிகர்களை யாரும் ஏமாற்றிவிட முடியாது’ என்கிறார் காஜல்.