குரல் His Mind Voice



ஏலே என்ன இது எழவு புடிச்ச சனியனா இருக்கு. ஏ! ஊருப்பாஷையப் பேசுனா கிண்டல் பண்ணுறானுக கிறுக்குப்பயலுக. இவனுக தஸ்ஸு புஸ்ஸுனு இங்கிலீசுல பேஸுவானுகளாம். ஏடேய்! நாம நம்ம தாய்மொழில பேசக்கூடாதாக்கும்? பேருக்கு முன்னால ஊருப்பேர வச்சா தப்பாய்ய்யா?

ஏ! கோக்குமாக்கா பேசிக்கிட்டு கோளாறு பண்றவன் எல்லாம் சினுமால பெரிய ஆளாய்யா? இல்ல, நான் தெரியாமத்தான் கேக்கேன், பட்டி தொட்டி பட்டிக்காட்டுல இருக்கவன் எல்லாம் கோடம்பாக்கம் பக்கம் வரப்புடாதோ?

ஏலே! ஒண்ணு சொல்லுதேன் கேட்டுக்குங்க, நாங்களும் ஜெயிச்சு வருவோமுய்யா. சும்மா இரிங்கப்பா, சும்மா இரிங்கப்பானு கூடால இருக்கவங்கிட்டயெல்லாம் சொன்னது தப்பாப் போச்சு சாமிகளா! எகனைக்கு மொகனையா நாமளும் போட்டி போட்டாத்தான் வாயும் வயிறும் நெறையுமுய்யா!

நெல்பா